DSWO Sivagangai Recruitment 2024: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் One stop Centre என்னும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்போது காலியாகவுள்ள Security Guard (பாதுகாப்பு காவலர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DSWO Sivagangai Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம் DSWO |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | Security Guard (பாதுகாப்பு காவலர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 24.12.2024 |
பணியிடம் | சிவகங்கை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | sivaganga.nic.in |
DSWO Sivagangai Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Security Guard (பாதுகாப்பு காவலர்)
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DSWO Sivagangai Recruitment 2024 கல்வித் தகுதி
சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகம் Security Guard (பாதுகாப்பு காவலர்) பணியிடங்களுக்கு கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி. அரசு நிறுவனம் (அ) அரசுசாரா நிறுனத்தில் குறைந்தபட்சம் 2 வருட பாதுகாவலர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 24 x 7 காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகம் Security Guard (பாதுகாப்பு காவலர்) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- மாத சம்பளம் பெறுவார்கள்.வேண்டும்.
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
DSWO Sivagangai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், உங்கள் Resume உடன் மாதிரி விண்ணப்ப படிவத்தில் உங்கள் பெயர், வயது, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் பணியின் பெயர், அனுபவம் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளை இணைத்து விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை-630561 என்ற முகவரிக்கு 24.12.2024 அன்று மாலை 5.45-க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024