DCWSS Kallakurichi Recruitment 2025: தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை (DCWSS) அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாகவுள்ள பல்வேறு தலைவர் (Chairperson) மற்றும் உறுப்பினர் (Member) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DCWSS Kallakurichi Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை (DCWSS) |
வேலை பெயர் | Chairperson, Member |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 13.06.2025 |
பணியிடம் | கள்ளக்குறிச்சி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | kallakurichi.nic.in |
DCWSS Kallakurichi Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Chairperson and Member- பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DCWSS Kallakurichi Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி | கல்வித் தகுதி |
Chairperson and Member | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குழந்தை உளவியல் (Child Psychology) அல்லது உளவியல் (Psychology) அல்லது சட்டம் (Law) அல்லது சமூகப் பணி (Social Work) அல்லது சமூகவியல் (Sociology) அல்லது மனித நல்வாழ்வு (Human Health) அல்லது கல்வி (Education) அல்லது மனித மேம்பாடு (Human Development) அல்லது சிறப்பு கல்வி (Special Education) ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவம்: குழந்தை நலன் (Child Welfare), குழந்தை உரிமைகள் (Child Rights) அல்லது இளம் குற்றவியல் நீதி (Juvenile Justice) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில், குழந்தை நலக் குழு (CWC), இளம் நீதி வாரியம் (JJB) அல்லது குழந்தைகளுடன் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் (NGOs) பணிபுரிந்த அனுபவம் விரும்பத்தக்கது. |
வயது வரம்பு விவரங்கள்
பதவி | வயது வரம்பு |
Chairperson and Member | 35 முதல் 65 வயது வரை (30.05.2025 அன்றுள்ளபடி, 30.05.1960 மற்றும் 29.05.1990 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்) |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
DCWSS Kallakurichi Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் 13.06.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Director, Directorate of Children Welfare and Special Service, No. 300, Purasawalkam High Road, Kellys, Chennai-600010
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.