Angalamman Temple Melmalayanur Recruitment 2025: தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் (ம) வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் திருக்கோயில் மருத்துவ மையத்தில் காலியாக உள்ள 06 மருத்துவர், உதவி செவிலியர், நர்சிங் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
Angalamman Temple Melmalayanur Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் |
| காலியிடங்கள் | 06 |
| பணிகள் | மருத்துவர், உதவி செவிலியர், நர்சிங் அசிஸ்டன்ட் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 24.11.2025 |
| பணியிடம் | விழுப்புரம் மாவட்டம்- தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://melmalayanurangalamman.hrce.tn.gov.in/ |
Angalamman Temple Melmalayanur Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
| மருத்துவர் | 02 |
| உதவி செவிலியர் | 02 |
| நர்சிங் அசிஸ்டன்ட் | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE Recruitment 2025 கல்வித் தகுதி
| பதவி (Post) | கல்வித் தகுதி (Qualification) |
| மருத்துவர் | MBBS (மருத்துவப் பட்டம்) |
| உதவி செவிலியர் | Auxiliary Nurse and Midwife (ANM) சான்றிதழ் அல்லது Diploma Nursing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| நர்சிங் அசிஸ்டன்ட் | மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary Examination – 12 ஆம் வகுப்பு) தேர்ச்சி மற்றும் Health Worker சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
Angalamman Temple Melmalayanur Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Angalamman Temple Melmalayanur Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவி (Post) | மாதச் சம்பளம் (Salary Range) |
| மருத்துவர் | ரூ. 36,700 – ரூ. 1,16,200 |
| உதவி செவிலியர் | ரூ. 18,500 – ரூ. 58,600 |
| நர்சிங் அசிஸ்டன்ட் | ரூ. 11,600 – ரூ. 36,800 |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Angalamman Temple Melmalayanur Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Angalamman Temple Melmalayanur Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025
Angalamman Temple Melmalayanur Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை “https://melmalayanurangalamman.hrce.tn.gov.in/” ஆகிய இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு “உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604204“. என்ற முகவரிக்கு நேரிலோ /தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









