Wipro Recruitment 2025: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது Elite வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க டிசம்பர் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தியாவில் செயல்படும் மிக முக்கிய நிறுவனமான விப்ரோ அடிக்கடி புதிய காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது, Elite – Telecom, Automotive, Embedded & CPPE (Security, Java Full Stack) FY 25 என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Wipro Recruitment 2025 | விவரங்கள் |
---|---|
நிறுவனம் | விப்ரோ டெக்னாலஜிஸ் |
வேலைவாய்ப்பு பெயர் | Elite – Telecom, Automotive, Embedded & CPPE (Security, Java Full Stack) FY 25 |
கடைசி தேதி | டிசம்பர் 30, 2023 (இரவு 11:59 மணி வரை) |
கல்வித் தகுதி | பிஇ / பிடெக் (2023 அல்லது 2024) |
தகுதித்துறைகள் | மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இசெ, IT, சைபர் செக்யூரிட்டி |
குறைந்தபட்ச மதிப்பெண்கள் | 60% அல்லது CGPA 6.0 (10ம் வகுப்பு, பிளஸ் 2, மற்றும் பட்டப்படிப்பு) |
மாத சம்பளம் | ரூ.29,166 (வருடம் ரூ.3.50 லட்சம்) |
போனஸ் | 6 மாதத்தில் ரூ.25,000, Merge Bonuses (18, 24, 36 மாதங்களில்) |
சேவை ஒப்பந்தம் | 12 மாதங்கள் (மீறினால் ரூ.75,000 செலுத்த வேண்டும்) |
தேர்வு செயல்முறை | 1. ஆன்லைன் அசஸ்மெண்ட் (Aptitude, Written Communication, Programming Test) |
பணியிடம் | PAN INDIA (இந்தியாவின் எந்த பகுதியிலும் நியமனம்) |
விண்ணப்பத்திற்கு தகுதி | கடந்த 3 மாதங்களில் விப்ரோ இண்டர்வியூ எழுதியிருக்கக் கூடாது |
விண்ணப்ப லிங்க் | இங்கே கிளிக் செய்யவும் |
Wipro Recruitment 2025 கல்வித் தகுதி
இந்த வேலைக்கு 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு பிஇ அல்லது பிடெக் முடித்த மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இசெ, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, அல்லது சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளின் பட்டதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது CGPA 6.0 பெற்றிருக்க வேண்டும். அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளிலும் 60% மதிப்பெண்கள் கொண்டிருக்க வேண்டும். ஓபன் ஸ்கூல் அல்லது டிஸ்டன்ஸ் எஜுகேஷனில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் இது 10 மற்றும் பிளஸ் 2 நிலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
Wipro Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.29,166 ஆக இருக்கும், வருடம் ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். வேலைக்குச் சேர்ந்த 6 மாதங்களுக்குப் பிறகு ரூ.25,000 போனஸாக வழங்கப்படும். மேலும் 18, 24, மற்றும் 36 மாதங்களில் Merge Bonuses கிடைக்கும். வருடாந்திர சம்பள உயர்வுகளும் வழங்கப்படும். எனினும், 12 மாத சேவை ஒப்பந்தம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி, 12 மாதங்களுக்குள் வேலையை விட்டு சென்றால் ரூ.75,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
Wipro Recruitment 2025 தேர்வு செயல்முறை
வேலைக்கு தேர்வு செய்ய 3 கட்டங்களில் சோதனை நடைபெறும். முதல் கட்டமாக ஆன்லைன் அசஸ்மெண்ட் இருக்கும், இதில் Aptitude Test, Written Communication Test, மற்றும் Online Programming Test ஆகியவை இடம்பெறும். Programming Test-ல் Java, C, C++, Python போன்ற மொழிகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். இரண்டாவது கட்டமாக Business Discussion மற்றும் மூன்றாவது கட்டமாக HR Discussion நடைபெறும்.
Wipro Recruitment 2025 வேலை இடம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இது ஒரு PAN INDIA வேலைவாய்ப்பாக இருப்பதால், பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதிகளிலும் நியமிக்கப்படலாம். விண்ணப்பதாரர்கள் கடந்த 3 மாதங்களில் விப்ரோ நடத்திய எந்தவொரு இன்டர்வியூவிலும் பங்கேற்றிருக்க கூடாது. விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Wipro பணிக்கான ஆன்லைன்விண்ணப்ப படிவம்: Click Here |