UPSC CAPF Recruitment 2025: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 357 Assistant Commandant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
ஆயுதக் காவல் படைகள் ( CAPF ):
மத்திய ஆயுதக் காவல் படைகள் ( CAPF ) இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள ஏழு ஆயுதக் காவல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.CAPF மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: எல்லைக் காவல் படைகள் ( அசாம் ரைபிள்ஸ் , எல்லைப் பாதுகாப்புப் படை , இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை , மற்றும் சஷாஸ்திர சீமா பால் ), உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகள் ( மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ), மற்றும் சிறப்புப் பணிப் படை ( தேசியப் பாதுகாப்புப் படை ).
UPSC CAPF Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மத்திய ஆயுதக் காவல் படைகள் Central Armed Police Forces |
காலியிடங்கள் | 357 |
பணி | Assistant Commandant |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 25.03.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsc.gov.in/ |
UPSC CAPF Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய ஆயுதக் காவல் படை CAPF வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Commandant | 357 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC CAPF Assistant Commandant கல்வித் தகுதி
மத்திய ஆயுதக் காவல் படை CAPF Assistant Commandant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, இதற்கு சமமான தகுதியை பெற்றவர்களும் இந்தத் தேர்வுக்கு தகுதியானவராக கொள்ளப்படுவர்.
வயது வரம்பு விவரங்கள்
மத்திய ஆயுதக் காவல் படை CAPF Assistant Commandant பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
மத்திய ஆயுதக் காவல் படை CAPF Assistant Commandant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,25,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
மத்திய ஆயுதக் காவல் படை CAPF Assistant Commandant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Written Examination (Paper 1 and Paper 2 )
- Physical Standards Tests/Physical Efficiency Tests
- Medical Standards Tests
- Final Selection / Merit
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 200/-
- கட்டண முறை: ஆன்லைன்
UPSC CAPF Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய ஆயுதக் காவல் படைகள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.03.2025 முதல் 25.03.2025 தேதிக்குள் https://upsconline.gov.in/ இணையதளத்தில் சென்று முதலில் New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |