TNRD Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆனது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 23 Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.05.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
TNRD Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamilnadu Rural Development and Panchayat Raj Department (TNRD) தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
காலியிடங்கள் | 23 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 05.05.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnrd.tn.gov.in |
TNRD Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்) | 23 |
மொத்தம் | 23 |
மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:
மாவட்டத்தின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை |
அரியலூர் | 1 |
செங்கல்பட்டு | 1 |
கோயம்புத்தூர் | 1 |
தருமபுரி | 1 |
காஞ்சிபுரம் | 1 |
கன்னியாகுமரி | 1 |
கரூர் | 1 |
கிருஷ்ணகிரி | 1 |
மதுரை | 1 |
மயிலாடுதுறை | 1 |
நாமக்கல் | 1 |
ராமநாதபுரம் | 1 |
சேலம் | 1 |
சிவகங்கை | 1 |
தஞ்சாவூர் | 1 |
தூத்துக்குடி | 1 |
திருச்சிராப்பள்ளி | 1 |
திருப்பத்தூர் | 1 |
திருப்பூர் | 1 |
திருவள்ளூர் | 1 |
திருவண்ணாமலை | 1 |
திருவாரூர் | 1 |
வேலூர் | 1 |
மொத்தம் | 23 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNRD Recruitment 2025 கல்வித் தகுதி
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது பொது நிர்வாகம், சட்டம், கல்வி, சமூகப் பணி அல்லது மேலாண்மைத் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மக்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் பணியாற்றிய அனுபவம் கட்டாயத் தகுதியாகக் கருதப்படும்.
TNRD Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறைதீர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 68 வயதுக்குள் இருக்க வேண்டும்
TNRD Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறைதீர்ப்பாளர் பணிக்கு ஒரு அமர்வுக்கு ஊதியமாக ₹.2250/- வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ₹.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். மாநில அரசு அலுவலர்களில் முதல் நிலை அலுவலர்களுக்கு அனுமதிக்கப்படும் விகிதத்தில் பயணப்படி (TA) மற்றும் தினப்படி (DA) வழங்கப்படும்.
TNRD Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
TNRD Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tnrd.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commissioner of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building, Chennai-600015
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05.05.2025 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்: | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.04.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025