TNPSC Group 4 Certificate Verification List 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpscresults.tn.gov.in/ வழியாக 07.11.2024 அன்று குரூப் 4 தேர்வு 2024க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த மதிப்பெண் (Cut off Mark) ஆகியவற்றை அனைத்து தேர்வர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
https://tnpscresults.tn.gov.in/ இணையதளத்தில் TNPSC குரூப் 4 தேர்வு 2024 எழுதிய தேர்வர்கள் தற்போது தங்கள் முடிவுகளைச் சரிபார்த்து, TNPSC இணையதளத்தின் ‘முடிவுகள்’ பிரிவில் இருந்து முடிவு PDF ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
TNPSC குரூப் 4 தேர்வு 2024 முடிவுகள்:
மொத்தம் 8932 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி 09.06.2024 காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை TNPSC குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. தற்காலிகமாக ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு (CV) க்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை ஆதரிக்கும் வகையிலான அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணையத்தின் இணையதளத்தில் உள்ள அவர்களின் ஒன் டைம் பதிவு (OTR) தளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
.
.
TNPSC குரூப் 4 தேர்வு 2024 – சுருக்கம்
தகவல் | விவரம் |
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
அறிவிக்கை எண் | அறிவிக்கை எண். 1/2024, விளம்பர எண். 678, தேதி: 30.01.2024 |
முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் | 07.11.2024 |
மொத்த காலிப் பணியிடங்கள் | 8932 |
பணி வகை | இணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப்-IV பணிகள்) |
தேர்வு முறை | எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு |
தேர்வு தேதி | 09.06.2024 காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை |
Result Status | வெளியானது |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnpsc.gov.in/ |
TNPSC குரூப் IV தேர்வு 2024 சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் PDF | Click Here |
குறிப்பு: மேலும் கூடுதல் தகவல்களுக்கு TNPSC இணையதளத்தைப் பார்க்கவும்.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?
- தேர்வு முடிவுகளை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpscresults.tn.gov.in/ ஐ பார்வையிட வேண்டும்.
- TNPSC குரூப் 4 தேர்வு 2024 முடிவுகளுக்கான இணைப்பை இணையதளத்தில் தேட வேண்டும். (அல்லது) “TNPSC குரூப் 4 தேர்வு 2024 முடிவுகள்” என்ற தலைப்பைக் கொண்ட பிரிவைத் தேடலாம்.
- உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை (DOB) உள்ளிட வேண்டும்.
- சரியான தகவல்களை உள்ளிட்ட பின், உங்கள் TNPSC குரூப் 4 தேர்வு 2024 முடிவுகள் திரையில் காட்டப்படும்.
TNPSC குரூப் IV தேர்வு 2024 சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் PDF | Click Here |
TNPSC குரூப் IV தேர்வு முடிவு 2024 இணைப்பு | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், மற்றும் நடத்துநர் வேலை! 10வது தேர்ச்சி போதும் – முழு விபரம்! TNSTC Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025