TNHRCE Office Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 06 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.05.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முக்கிய விவரங்களை இனி விரிவாகக் காணலாம்.
TNHRCE Office Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
காலியிடங்கள் | 06 |
பணிகள் | அலுவலக உதவியாளர்(Office Assistant) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 28.05.2025 (மாலை 5.45 மணிக்குள்) |
பணியிடம் | சென்னை,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://hrce.tn.gov.in/ |
TNHRCE Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025 கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
அலுவலக உதவியாளர்(Office Assistant) | 06 |
மொத்தம் | 06 |
TNHRCE Office Assistant Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு (8th Standard) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுவே இந்த பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை கல்வித் தகுதியாகும்.
TNHRCE Office Assistant Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 01.07.2024 தேதியின்படி பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SCA/SC/ST): 18 வயது முதல் 37 வயது வரை இருக்கலாம்.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC/MBC): 18 வயது முதல் 34 வயது வரை இருக்கலாம்.
- பொதுப் பிரிவினர் (UR): 18 வயது முதல் 32 வயது வரை இருக்கலாம்.
எனவே, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்த வயது வரம்புகளுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
TNHRCE Office Assistant Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலக உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். இது ஊதிய நிலை – 1 (Level – 1) இன் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
TNHRCE Office Assistant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், முதலில் துறையின் அதிகாரப்பூர்வ திருக்கோயில் இணையதளமான https://hrce.tn.gov.in/ சென்று விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்த பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034” என்ற முகவரிக்கு 28.05.2025 தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை கவனமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.