Pudukkottai Government ITI Recruitment 2026: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (Government Industrial Training Institute) காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பள விகிதம் மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 28.10.2026 முதல் பெறப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 17.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கான காலியிடங்கள் விவரம், கல்வித் தகுதி, சம்பள விவரம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
| Pudukkottai Government ITI Recruitment 2026 | |
|---|---|
| நிறுவனம் | அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை |
| துறை | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு அரசு |
| பதவி | Office Assistant (அலுவலக உதவியாளர்) |
| காலியிடங்கள் | 02 |
| கல்வித் தகுதி | 8ஆம் வகுப்பு தேர்ச்சி |
| சம்பளம் | ₹15,700 – ₹58,100 |
| பணியிடம் | புதுக்கோட்டை, தமிழ்நாடு |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் / நேரில்) |
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 28.10.2026 |
| கடைசி தேதி | 17.11.2026 – மாலை 5.45 மணி |
Pudukkottai Government ITI Recruitment 2026 – காலியிடங்கள் விவரம்
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பணியிடம் பொதுப் பிரிவு முன்னுரிமைக்கும், மற்றொரு பணியிடம் ஆதரவற்ற விதவை முன்னுரிமையின் கீழ் SC(A) பெண் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| பதவி | காலியிடங்கள் |
|---|---|
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | 02 |
| மொத்தம் | 02 |
Government ITI Pudukkottai Vacancy 2026 – கல்வித் தகுதி
இந்தப் தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பதும் அவசியமான தகுதியாகும்.
Pudukkottai Government ITI Recruitment 2026 – வயது வரம்பு
தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு சமூகப் பிரிவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30.09.2026 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
| பிரிவு | அதிகபட்ச வயது |
|---|---|
| OC | 30 வயது |
| BC / MBC / DNC | 32 வயது |
| SC / SCA / ST | 35 வயது |
கூடுதல் வயது தளர்வு:
- மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
- ஆதரவற்ற விதவைகளுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
Pudukkottai Government ITI Recruitment 2026 – சம்பள விவரம்
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026 அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-1 ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
| பதவி | சம்பள விகிதம் |
|---|---|
| Office Assistant | ₹15,700 – ₹58,100 |
Tamil Nadu Government Jobs 2026 – தேர்வு செய்யும் முறை
இந்தப் தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி மற்றும் சான்றிதழ்களைச் சரிபார்த்து, தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Government ITI Pudukkottai Recruitment 2026 – விண்ணப்பக் கட்டணம்
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
Pudukkottai Government ITI Recruitment 2026 – முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
|---|---|
| அறிவிப்பு வெளியான தேதி | 26.10.2026 |
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 28.10.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.11.2026 |
| விண்ணப்பம் சென்றடைய வேண்டிய நேரம் | மாலை 5.45 மணி |
Pudukkottai Office Assistant Apply Offline – எப்படி விண்ணப்பிப்பது?
இந்த தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் https://pudukkottai.nic.in/ செல்லவும்.
- Office Assistant வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து முழுமையாகப் படிக்கவும்.
- அதனுடன் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.
- கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான பிற ஆவணங்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலக வேலை நாட்களில் நேரடியாகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
திருச்சி மெயின் ரோடு,
திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை – 622 002.
முக்கிய குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 17.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும். தகுதியற்ற, காலதாமதமாக வரும் மற்றும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
அரசு ITI வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF – முக்கிய இணைப்புகள்
| விவரம் | இணைப்பு |
|---|---|
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Download PDF |
| விண்ணப்பப் படிவம் PDF | Download Application Form |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
1. புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2. இந்த வேலைக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும், மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
3. அலுவலக உதவியாளர் பணிக்கான சம்பளம் எவ்வளவு?
மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
4. விண்ணப்பிக்கக் கடைசி தேதி என்ன?
17.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
5. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிக்க வேண்டும்?
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
முடிவுரை
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இதர நிபந்தனைகளைச் சரிபார்த்து, 17.11.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதுக்கோட்டை அரசு வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு அரசு வேலை 2026, அரசு தொழிற்பயிற்சி நிலைய வேலை, அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு, 8ஆம் வகுப்பு தேர்ச்சி வேலை, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு, அரசு ITI வேலைவாய்ப்பு, தேர்வு இல்லாத அரசு வேலை, நேர்காணல் மூலம் வேலை, அலுவலக உதவியாளர் சம்பளம், Pudukkottai Government Jobs 2026, Government ITI Pudukkottai Recruitment 2026, Office Assistant Recruitment 2026, Tamil Nadu Government Jobs, 8th Pass Government Jobs, Office Assistant Vacancy 2026, Pudukkottai Office Assistant Jobs.தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026


