TN Panchayat Office Recruitment 2025: தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரத்தில், தூய்மை பாரத இயக்க பகுதி II -ன் கீழ் காலியாக உள்ள பல்வேறு வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.07.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
TN Panchayat Office Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamilnadu Rural Development and Panchayat Raj Department (TNRD) தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
காலியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 05.07.2025 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tenkasi.nic.in/ |
TN Panchayat Office Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) | பல்வேறு |
பணி அமர்த்தப்படும் இடம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செங்கோட்டை வட்டாரம்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Panchayat Office Recruitment 2025 கல்வித் தகுதி
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (MSW / B.Sc Environment Science / Environment Eng / B.Sc Visual Communication பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).
- தொழில்நுட்ப கல்வித்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். MS Office (MS Excel, MS Word, Power Point -முன் அனுபவம் இருக்க வேண்டும்.)
குறிப்பு:
- இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- தென்சுரிமாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
TN Panchayat Office Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி | மதிப்பூதியம் (ரூ.) |
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) | மாதம் Rs.22,000/- + பயணப்படி Rs.3,000/- |
TN Panchayat Office Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
TN Panchayat Office Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதி மற்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை:
- தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
TN Panchayat Office Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.06.2025 முதல் 05.07.2025 தேதிக்குள் https://tenkasi.nic.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |