Chennai Metro Rail Recruitment 2025: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL – Chennai Metro Rail Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், ஜூலை 2 முதல் ஜூலை 9, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் நேரடியாகக் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Chennai Metro Rail Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Chennai Metro Rail Limited மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் |
காலியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி நேர்காணல் |
நேர்காணல் தேதி | ஜூலை 02, 2025, ஜூலை 03, 2025, ஜூலை 04, ஜூலை 07, 2025, ஜூலை 08, 2025 & ஜூலை 09, 2025 |
பணியிடம் | சென்னை |
Chennai Metro Rail Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Supervisor (Operations) | பல்வேறு |
Supervisor (Maintenance) | பல்வேறு |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chennai Metro Rail Recruitment 2025 கல்வித் தகுதி
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Supervisor (Operations) | Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Supervisor (Maintenance) | Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
CMRL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Supervisor (Operations) | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
Supervisor (Maintenance) | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
Chennai Metro Rail Recruitment 2025 சம்பள விவரங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான சம்பள விவரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் | சம்பளம் |
Supervisor (Operations) | ரூ.26,660/- |
Supervisor (Maintenance) | ரூ.26,660/- |
CMRL Recruitment 2025 தேர்வு செயல்முறை
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.
- ஆவண சரிபார்ப்பு மற்றும் பரிசீலனை (Document Verification, Screening): விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான தகுதிகள் உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
- தமிழ் மொழித் திறன் தேர்வு (Tamil Language Reading, Writing and Speaking Proficiency Test): விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் உள்ள திறனைச் சோதிக்கும் வகையில் ஒரு தேர்வு நடத்தப்படும்.
- மனோவியல் தேர்வு (Psycho. Test): மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் செயல்பாடுகள் (Operations) போன்ற சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களின் மனோவியல் திறனை மதிப்பிடும் வகையில் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்படும்.
Chennai Metro Rail Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
Chennai Metro Rail Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 2 முதல் ஜூலை 9, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் உடன் எடுத்து வரவும்.
நேர்காணல் நடைபெறும் தேதிகள்:
- ஜூலை 02, 2025
- ஜூலை 03, 2025
- ஜூலை 04, 2025
- ஜூலை 07, 2025
- ஜூலை 08, 2025
- ஜூலை 09, 2025
நேர்காணல் நடைபெறும் இடம்:
Institute of Chemical Technology, C I T Campus, Tharamani, Chennai- 600 113
தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English) | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |