TN Govt Mega Job Fair 2025 in Thoothukudi: வேலை தேடுகிறீர்களா? இந்த முறை உங்களுக்கு வேலை நிச்சயம்! 2025 பிப்ரவரி 22-ஆம் தேதி தூத்துக்குடியில் தமிழக அரசு மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! இதில் பங்கேற்பதற்கான இடம், முன்பதிவு விவரங்கள் மற்றும் தகுதிகள் பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 22.02.2025 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி, மில்லர்புரம், வ.உ.சி கலைக்கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும்.
சிறப்பு அம்சங்கள்:
- 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
- 5,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
- வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
கல்வித் தகுதிகள்:
- 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை / ஐ.டி.ஐ./டிப்ளமோ / நர்சிங் பார்மஸி/ பொறியியல் பட்டப் படிப்பு
வயது வரம்பு:
- 18 வயது முதல் 40 வயது வரை
முன்பதிவு எப்படி செய்வது?
www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட QR Code ஐ ஸ்கேன் செய்து https://forms.gle/pEyqpjfqqhshrH616 என்ற Google Link-ல் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:
- 9677734590, 0461-2340159
நேர்காணல் விவரங்கள்
- நேர்காணல் தேதி: 2025 பிப்ரவரி 22-ஆம் தேதி
- நேர்காணல் நேரம்: காலை 9:00 மணி – மாலை 3:00 மணி
- நேர்காணல் இடம்: மில்லர்புரம், வ.உ.சி கலைக்கல்லூரி, தூத்துக்குடி
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
அனைவருக்கும் இலவசமாக அனுமதி