Tiruvallur DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் தற்போது காலியாக உள்ள 15 Driver, Lab Technician, Dental Officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tiruvallur DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் |
காலியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 28.02.2025 |
பணியிடம் | திருவள்ளூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruvallur.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி (Post) | காலியிடம் |
பல் மருத்துவ அதிகாரி (Dental Medical Officer) | 1 |
தரவு மேலாளர் (Data Manager) | 1 |
Vaccine Cold Chain Manager | 2 |
துப்புரவாளர்/ ஆய்வக உதவியாளர் (Cleaner/Lab Assistant) | 4 |
MMU ஓட்டுநர் (MMU Driver) | 1 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician) | 6 |
மொத்தம் | 15 |
கல்வித் தகுதி
துப்புரவாளர்/ஆய்வக உதவியாளர் (MMU Cleaner/Lab Assistant):
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MMU ஓட்டுநர் (MMU Driver):
விண்ணப்பதாரர்கள் கனரக ஓட்டுநர் உரிமத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician):
மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல் மருத்துவ அதிகாரி (Dental Medical Officer):
பல் மருத்துவ அறிவியலில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தரவு மேலாளர் (Data Manager):
கணினி அறிவியலில் முதுகலை அறிவியல் பட்டம் (M.Sc in CS) அல்லது தகவல் தொழில்நுட்பம்/எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் இளங்கலை பட்டம் (BE in IT/Electronics) மற்றும் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Vaccine Cold Chain Manager:
வணிக நிர்வாகம், பொது சுகாதாரம், கணினி பயன்பாடு, மருத்துவமனை மேலாண்மை, சமூக அறிவியல், பொருள் மேலாண்மை, விநியோக சங்கிலி மேலாண்மை அல்லது குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி மெக்கானிக் துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | அதிகபட்ச வயது |
தரவு மேலாளர் (Data Manager) | 40 வயது |
பல் மருத்துவ அதிகாரி (Dental Medical Officer) | 35 வயது |
Vaccine Cold Chain Manager | 35 வயது |
துப்புரவாளர்/ ஆய்வக உதவியாளர் | 35 வயது |
ஓட்டுநர் (MMU Driver) | 35 வயது |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician) | 35 வயது |
Tiruvallur DHS Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி (Post) | சம்பள விகிதம் |
பல் மருத்துவ அதிகாரி (Dental Medical Officer) | மாதம் ரூ. 34,000 |
தரவு மேலாளர் (Data Manager) | மாதம் ரூ. 20,000 |
Vaccine Cold Chain Manager | மாதம் ரூ. 23,000 |
துப்புரவாளர்/ ஆய்வக உதவியாளர் | மாதம் ரூ. 8,500 |
ஓட்டுநர் (MMU Driver) | மாதம் ரூ. 13,500 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician) | மாதம் ரூ. 13,000 |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Tiruvallur DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruvallur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சேர்த்து கல்வித் தகுதி, அனுபவ சான்றுகள், சரிபார்க்கப்பட்ட நகல்கள், மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை 28.02.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
54/5 அசூரி தெரு,
திருவள்ளூர்-602001.
விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ, பதிவிக்கப்பட்ட தபாலிலோ அனுப்பலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF மற்றும் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |