TN Govt CWAL Tirunelveli Recruitment 2025: தமிழக அரசின் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள 30 Lab Attendant, Lab Technician, Chemist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Govt CWAL Tirunelveli Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழக அரசின் தலைமை நீர் பகுப்பாய்வகம் (CWAL) மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (DPHL) |
காலியிடங்கள் | 30 |
பணிகள் | Lab Attendant, Lab Technician, Chemist |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 11.03.2025 |
பணியிடம் | திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தேனி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tirunelveli.nic.in/ |
TN Govt CWAL Tirunelveli Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசின் திருநெல்வேலி மாவட்டம் மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி பெயர் | காலியிடம் |
ஆய்வக உதவியாளர் (Laboratory Attendant) | 10 |
ஆய்வக தொழில்நுட்புனர் (Laboratory Technician) | 10 |
Chemist | 10 |
மொத்தம் | 30 |
பதவி மற்றும் மாவட்ட வாரியான அட்டவணை
மாவட்ட வாரியான ஆய்வக உதவியாளர் (Laboratory Attendant) காலியிட விவரங்கள்:
மாவட்டம் | காலியிடங்களின் எண்ணிக்கை |
திருநெல்வேலி | 2 |
ராமநாதபுரம், | 1 |
தென்காசி | 1 |
தூத்துக்குடி | 1 |
விருதுநகர் | 1 |
சிவகங்கை | 1 |
மதுரை | 1 |
கன்னியாகுமரி | 1 |
தேனி | 1 |
மாவட்ட வாரியான ஆய்வக தொழில்நுட்புனர் (Laboratory Technician) காலியிட விவரங்கள்:
மாவட்டம் | காலியிடங்களின் எண்ணிக்கை |
திருநெல்வேலி | 2 |
ராமநாதபுரம், | 1 |
தென்காசி | 1 |
தூத்துக்குடி | 1 |
விருதுநகர் | 1 |
சிவகங்கை | 1 |
மதுரை | 1 |
கன்னியாகுமரி | 1 |
தேனி | 1 |
மாவட்ட வாரியான Chemist காலியிட விவரங்கள்:
மாவட்டம் | காலியிடங்களின் எண்ணிக்கை |
திருநெல்வேலி | 2 |
ராமநாதபுரம், | 1 |
தென்காசி | 1 |
தூத்துக்குடி | 1 |
விருதுநகர் | 1 |
சிவகங்கை | 1 |
மதுரை | 1 |
கன்னியாகுமரி | 1 |
தேனி | 1 |
கல்வித் தகுதி
Lab Attendant பணிக்கு 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Lab Technician பணிக்கு உயிரியல் (Biology) பாடத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (DMLT) -2 வருட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chemist பணிக்கு விண்ணப்பதாரர்கள் Chemistry பாடப்பிரிவில் B.Sc அல்லது M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு விவரங்கள்
Lab Attendant பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
Lab Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
Chemist பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள்
Lab Attendant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,500/- சம்பளம் வழங்கப்படும்
Lab Technician பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,000/- சம்பளம் வழங்கப்படும்
Chemist பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,000/- சம்பளம் வழங்கப்படும்
தேர்வு செயல்முறை
தமிழக அரசின் திருநெல்வேலி மாவட்டம் மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Tirunelveli Chief Water Analysis Laboratory Recruitment 2025 பணியிடம் விவரங்கள்
தமிழக அரசின் திருநெல்வேலி மாவட்டம் மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் பணியமர்த்த்ப்படுவார்கள்!
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
TN Govt CWAL Tirunelveli Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பப் படிவத்தை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வித் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை 11.03.2025 மாலை 5 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அல்லது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வித் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை பதிவு அஞ்சல் மூலம் “The Chief Water Analyst, Regional Public Health Water Analysis Laboratory, Anna Nagar, Tirunelveli, PIN – 627011. Phone: 0462 – 2900353” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |