Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு கிடையாது! தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாய அதிகாரி வேலை; உடனே விண்ணப்பிக்கவும் TMB Bank...

தேர்வு கிடையாது! தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாய அதிகாரி வேலை; உடனே விண்ணப்பிக்கவும் TMB Bank Recruitment 2025

TMB Bank Recruitment 2025: பிரபல தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள விவசாய அதிகாரி (Agricultural Officer – Scale I) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பற்றி:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை கொண்டுள்ளது.
.

DescriptionDetails
வேலை பிரிவுவங்கி வேலைகள் 2025
துறைகள்தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி
Tamilnad Mercantile Bank
பணிகள்விவசாய அதிகாரி (Agricultural Officer – Scale I)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி09.02.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://www.tmbnet.in/tmb_careers/

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • விவசாய அதிகாரி (Agricultural Officer – Scale I)

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாய அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க, விவசாயம் சார்ந்த படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால் அறிவியல், வேளாண் பொறியியல் போன்ற பிரிவுகளில் அங்கீகாரப் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அதோடு, வங்கி, நிதி நிறுவனம் போன்ற துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாய அதிகாரி பணியிடங்களுக்கு 31.12.2024 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கான சம்பள விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விரும்புகிறவர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் நேரடியாகவோ அல்லது வீடியோ கலந்துரையாடல் மூலமாகவோ நடைபெறும். நேர்காணல் குறித்த விவரங்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்

விவசாய அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. ஆன்லைன் வழியாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் சரியான இமெயில் மற்றும் செல்போன் எண்களை வழங்க வேண்டும். 27.01.2025 முதல் 09.02.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments