Sunday, April 20, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 - 369 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி...

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 – 369 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி போதும்! Tiruvallur Anganwadi Recruitment 2025

Tiruvallur Anganwadi Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 369 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.. இந்த வேலைவாய்ப்புகளுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு மற்றும் பிற விவரங்களை அறிந்து கொண்டு, 23.04.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி மற்றும் வயது வரம்பு எவ்வளவு போன்ற முழுமையான விவரங்களை தொடர்ந்து காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி
பணிகள் துறை (ICDS)
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் மையம்
காலியிடங்கள்369
பணிகள்அங்கன்வாடி பணியாளர்,
குறு அங்கன்வாடி பணியாளர்
மற்றும் அங்கன்வாடி உதவியாளர்
பணியிடம்திருவள்ளூர் மாவட்டம்
கடைசி தேதி23.04.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://icds.tn.gov.in/

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
அங்கன்வாடி பணியாளர்301
அங்கன்வாடி உதவியாளர்68
மொத்தம்369

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 க்கான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

  • அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு விவரங்கள் பின்வருமாறு:

  • அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அதேசமயம், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்:

  • பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு:

  • அங்கன்வாடி பணியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 7,700 முதல் ரூ. 24,200 வரை வழங்கப்படும்.
  • அதேபோல், அங்கன்வாடி உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 4,100 முதல் ரூ. 12,500 வரை வழங்கப்படும்.

இது அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகள் அடங்கும். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் https://icds.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் சுய கையொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் நகல்களையும் உங்கள் மாவட்டம் அமைந்துள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக முகவரிக்கு 23.04.2025 ஆம் தேதிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டிய அலுவலக முகவரி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முகவரி விவரங்கள் PDF

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அங்கன்வாடி பணியாளர் விண்ணப்பப் படிவம்Click Here
அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்பப் படிவம்Click Here
மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி PDFClick Here
திருவள்ளூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments