Tamilnadu Mid Day Meal Scheme Recruitment 2025: தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் மதிய உணவு திட்டத்தில் காலியாக உள்ள 03 ஜூனியர் எழுத்தர்(Junior clerk), சீனியர் எழுத்தர்(Senior Clerk), கணினி மேலாளர்(System Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.03.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Tamilnadu Mid Day Meal Scheme Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மதிய உணவு திட்டம் |
காலியிடங்கள் | 03 |
பணிகள் | ஜூனியர் எழுத்தர்(Junior clerk), சீனியர் எழுத்தர்(Senior Clerk), கணினி மேலாளர்(System Manager) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 10.03.2025 |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnsocialwelfare.tn.gov.in |
Tamilnadu Mid Day Meal Scheme Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மதிய உணவு திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
ஜூனியர் எழுத்தர்(Junior clerk) | 01 |
சீனியர் எழுத்தர்(Senior Clerk) | 01 |
கணினி மேலாளர்(System Manager) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Mid Day Meal Scheme Recruitment 2025 கல்வித் தகுதி
ஜூனியர் எழுத்தர்(Junior clerk) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சீனியர் எழுத்தர்(Senior Clerk) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் ஏதேனும் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
கணினி மேலாளர்(System Manager) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் Computer Science, Information Technology, அல்லது Electronics and Communication Engineering துறைகளில் B.Sc/B.E/B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Bachelor’s degree in Computer Applications ((BCA)) அல்லது தொடர்புடைய துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
- ஜூனியர் எழுத்தர்(Junior clerk) பணிக்கு வின்னப்பத்தக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
- சீனியர் எழுத்தர்(Senior Clerk) பணிக்கு வின்னப்பத்தக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
- கணினி மேலாளர்(System Manager) பணிக்கு வின்னப்பத்தக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
ஜூனியர் எழுத்தர்(Junior clerk) | மாதம் ரூ.21,000/-முதல் |
சீனியர் எழுத்தர்(Senior Clerk) | மாதம் ரூ.31,000/- முதல் |
கணினி மேலாளர்(System Manager) | மாதம் ரூ.28,000/- முதல் |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மதிய உணவு திட்டம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Mid Day Meal Scheme Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மதிய உணவு திட்டம் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான கல்வி சான்றிதழ்கள் இணைத்து மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Commissioner, O/o Commissionerate Of Social Welfare, Kamarajar Salai, Lady Wellington College Campus, Chennai – 05
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள் 10.03.2025 தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.