Salem OSC Recruitment 2025: தமிழ்நாடு அரசு சேலம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் காலியாக உள்ள முதன்மை ஆலோசகர், வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் தற்காலிகமாக பணியாற்ற ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
பெண்களுக்கான அவசர உதவி மையங்கள்:
சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க 1 ஒன்றிய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018 முதல் சேலம் வட்டாரத்திலும், பிப்ரவரி 2024 முதல் ஆத்தூர் வட்டாரத்திலும் மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 2 மையங்கள் செயல்பட்டு வருகிறது.
Salem One Stop Centre Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் |
காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 10.02.2025 |
பணியிடம் | சேலம்,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://salem.nic.in/ |
Salem OSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
முதன்மை ஆலோசகர் | 01 |
வழக்கு பணியாளர் | 03 |
பல்நோக்கு உதவியாளர் | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Salem OSC Recruitment 2025 கல்வித் தகுதி
முதன்மை ஆலோசகர்: இதற்கான கல்வித் தகுதியாக முதுகலை சமூகப்பணி மற்றும் உளவியல் தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.
வழக்கு பணியாளர்: இதற்கான கல்வித் தகுதி இளங்கலை / முதுகலை சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.
பல்நோக்கு உதவியாளர்: இதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். நன்கு சமையல் தெரிந்த பெண் சமையளராக இருக்க வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
முதன்மை ஆலோசகர்: குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வழக்கு பணியாளர்: குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர்: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
முதன்மை ஆலோசகர் காலிப்பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூ.22,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பணியாளர் காலிப்பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூ.18,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூ.10,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Salem OSC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை 10.02.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் “மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண் 126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சேலம்” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |