Namakkal DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாகவுள்ள 05 Accountant (கணக்காளர்), Protection Officer (பாதுகாப்பு அதிகாரி), Social Worker (சமூக பணியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Namakkal DCPU Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம் |
காலியிடங்கள் | 05 |
வேலை பெயர் | Accountant (கணக்காளர்), Protection Officer (பாதுகாப்பு அதிகாரி), Social Worker (சமூக பணியாளர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 25.02.2025 |
பணியிடம் | நாமக்கல்,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://namakkal.nic.in/ |
Namakkal DCPU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Accountant (கணக்காளர்) – 01 காலியிடங்கள்
- Protection Officer (பாதுகாப்பு அதிகாரி) – 02 காலியிடங்கள்
- Social Worker (சமூக பணியாளர்) – 02 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu DCPU Recruitment 2025 கல்வித் தகுதி
கணக்காளர் (Accountant) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (Commerce) / கணிதம் (Mathematics ) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 வருட அனுபவம். மற்றும் கணினியில் Tally சாஃப்ட்வேர் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
Social Worker (சமூக பணியாளர்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.A படிப்பில் சமூகப் பணி / சமூகவியல் / சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Protection Officer (பாதுகாப்பு அதிகாரி) பணிக்கு விண்ணப்பதாரர்கள் சமூகப் பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டம் பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலன் துறையில் திட்ட உருவாக்கம் / அமலாக்கம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும் (MS-Word, MS-Excel, Power Point).
District Child Protection Unit Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியின்படி வயது அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
Accountant (கணக்காளர்) | மாதம் Rs.18,536/- |
Protection Officer (பாதுகாப்பு அதிகாரி) | மாதம் Rs.27,804/- |
Social Worker (சமூக பணியாளர்) | மாதம் Rs.18,536/- |
District Child Protection Unit Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
District Child Protection Unit Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
Namakkal DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை https://namakkal.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Room No: 320, 3rd Floor, District Collectorate Campus, Namakkal District – 637 003. Ph : 04286 233103.
முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பிறகு வந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்களே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025