Madras High Court Recruitment 2025: தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 47 Personal Assistant (தனிப்பட்ட உதவியாளர்), Personal Clerk (தனிப்பட்ட எழுத்தர்), Private Secretary (தனிச் செயலாளர்) போன்ற பல்வேறு பதவிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 36,400 முதல் ரூ. 1,34,200 வரை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, 05.05.2025 என்ற கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Madras High Court Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | சென்னை உயர் நீதிமன்றம் (MHC) Madras High Court (MHC) |
காலியிடங்கள் | 47 |
பணி | Personal Assistant, Personal Clerk, Private Secretary |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 05.05.2025 |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mhc.tn.gov.in/recruitment/ |
Madras High Court Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Personal Assistant (தனிப்பட்ட உதவியாளர்) | 28 |
Private Secretary (தனிச் செயலாளர்) | 01 |
Personal Assistant (to the Registrars) | 14 |
Personal Clerk (தனிப்பட்ட எழுத்தர்) | 04 |
மொத்தம் | 47 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras High Court Recruitment 2025 கல்வித் தகுதி
Madras High Court Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
வயது வரம்பு (01.07.2025 தேதியின்படி)
அனைத்து பதவிகளுக்கும் பொதுவானது:
- BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) / BCM (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – முஸ்லிம்) / SC (ஆதி திராவிடர்) / SC(A) (ஆதி திராவிடர் – அருந்ததியர்) / ST (பழங்குடியினர்) / MBC&DC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் & சீர்மரபினர்) / அனைத்து சாதியினரின் ஆதரவற்ற விதவைகள்: 18 முதல் 37 வயது வரை.
- UR (பொதுப் பிரிவினர்) / இதர பிரிவினர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, அதாவது மற்ற அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள்): 18 முதல் 32 வயது வரை.
- பணியில் உள்ள விண்ணப்பதாரர்கள் (In-Service Candidates): 18 முதல் 47 வயது வரை.
- முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) – BC / BCM / SC / SC(A) / ST / MBC&DC பிரிவினர்: 55 வயது வரை.
- முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) – இதர / UR பிரிவினர்: 50 வயது வரை.
- PwBD (மாற்றுத்திறனாளிகள்): அவரவர் சமூகத்தின் அதிகபட்ச வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் வழங்கப்படும்.
இந்த வயது வரம்புகள் 01 ஜூலை 2025 தேதியின்படி கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பள வரம்பு |
Personal Assistant (தனிப்பட்ட உதவியாளர்) | ரூ.56,100 – 2,05,700/- (சம்பள நிலை – 22) |
Private Secretary (தனிச் செயலாளர்) | ரூ.56,100 – 2,05,700/- (சம்பள நிலை – 22) |
Personal Assistant (to the Registrars) | ரூ.36,400 – 1,34,200/- (சம்பள நிலை – 16) |
Personal Clerk (தனிப்பட்ட எழுத்தர்) | ரூ.20,600 – 75,900/- (சம்பள நிலை – 10) |
Madras High Court Recruitment 2025 தேர்வு செயல்முறை
சென்னை உயர்நீதிமன்றம் 2025-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, Skill Test, Viva-Voce மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
Personal Assistant
- BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) / BCM (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – முஸ்லிம்) / MBC&DC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் & சீர்மரபினர்) / இதர பிரிவினர் / UR (பொதுப் பிரிவினர்) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1,200/-
- ஆதரவற்ற விதவைகள் / PwBD (மாற்றுத்திறனாளிகள்) / SC(A) (ஆதி திராவிடர் – அருந்ததியர்) / SC (ஆதி திராவிடர்) / ST (பழங்குடியினர்) விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை.
Private Secretary
- BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) / BCM (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – முஸ்லிம்) / MBC&DC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் & சீர்மரபினர்) / இதர பிரிவினர் / UR (பொதுப் பிரிவினர்) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1,200/-
- ஆதரவற்ற விதவைகள் / PwBD (மாற்றுத்திறனாளிகள்) / SC(A) (ஆதி திராவிடர் – அருந்ததியர்) / SC (ஆதி திராவிடர்) / ST (பழங்குடியினர்) விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை.
Personal Assistant (to the Registrars)
- BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) / BCM (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – முஸ்லிம்) / MBC&DC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் & சீர்மரபினர்) / இதர பிரிவினர் / UR (பொதுப் பிரிவினர்) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1,000/-
- ஆதரவற்ற விதவைகள் / PwBD (மாற்றுத்திறனாளிகள்) / SC(A) (ஆதி திராவிடர் – அருந்ததியர்) / SC (ஆதி திராவிடர்) / ST (பழங்குடியினர்) விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை.
Personal Clerk
- BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) / BCM (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – முஸ்லிம்) / MBC&DC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் & சீர்மரபினர்) / இதர பிரிவினர் / UR (பொதுப் பிரிவினர்) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.800/-
- ஆதரவற்ற விதவைகள் / PwBD (மாற்றுத்திறனாளிகள்) / SC(A) (ஆதி திராவிடர் – அருந்ததியர்) / SC (ஆதி திராவிடர்) / ST (பழங்குடியினர்) விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை.
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
Madras High Court Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in/recruitment/ என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு, ஆட்சேர்ப்புப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பை முழுமையாகப் படித்த பின்னரே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 06.04.2025 முதல் 05.05.2025 வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த காலத்திற்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |