Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலை; தேர்வு கிடையாது; நேரடி நேர்காணல் மட்டும் ||...

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலை; தேர்வு கிடையாது; நேரடி நேர்காணல் மட்டும் || உடனே விண்ணப்பிக்கவும்! Kendriya Vidyalaya School Sivaganga Recruitment 2025

Kendriya Vidyalaya School Sivaganga Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், முதன்மை ஆசிரியர்கள் (PRT), பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (TGT) மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT) மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் உட்பட பல்வேறு பாடங்களுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நேரடி நேர்காணல் (Walk-In-Interview) மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி
காலியிடங்கள்பல்வேறு
பணிகள்டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்
முதன்மை ஆசிரியர்கள் (PRT),
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (TGT) மற்றும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT),
கணினி பயிற்றுநர் மற்றும்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
நேர்காணல் தேதிமார்ச் 21 மற்றும் 22
பணியிடம்சிவகங்கை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sivaganga.kvs.ac.in/

சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதன்மை ஆசிரியர்கள் (PRT), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (TGT), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT), கணினி பயிற்சியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் (Data Entry Operator) ஆகிய பல்வேறு ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு நடைபெறும் நேரடி நேர்காணலில் (Walk-in Interview) கலந்து கொள்ளலாம்.

PRT (முதன்மை ஆசிரியர்கள்): கல்வியில் டிப்ளமோ (Diploma in Education) அல்லது பி.எல்.எட் (B.El.Ed) அல்லது பி.எட் (B.Ed).

TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்): தொடர்புடைய துறைகளில் இளங்கலை பட்டம் மற்றும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு).

PGT (முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்): தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் (B.Ed).

Data Entry Operator (டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்): ஏதேனும் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள்.

Computer Instructor (கணினி பயிற்றுநர்): அறிவியல்/கணிதத்தில் இளங்கலை பட்டம் மற்றும் கணினி பயன்பாட்டில் முதுகலை டிப்ளமோ (PG Diploma in Computer Application).

கேந்திரிய வித்யாலயா பள்ளி அறிவிப்பின்படி, பின்வரும் தொகுப்பூதியங்கள் வழங்கப்படும்:

  • பட்டதாரி ஆசிரியர்கள்: மாதம் ரூ.26,250
  • தொடக்க கல்வி ஆசிரியர்கள்: மாதம் ரூ.21,250
  • கணினி பயிற்சியாளர்: மாதம் ரூ.26,250
  • சிறப்பு கல்வியாளர்: மாதம் ரூ.21,250
  • தமிழ் ஆசிரியர்: மாதம் ரூ.18,750

சிவங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. நேர்காணல்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சிவங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி 2025 ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், முதலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அல்லது கீழே வழங்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், நேர்காணலுக்கு முன், கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் Google Form Application. நேர்காணல் நாள் மற்றும் நேரம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக பார்க்கவும்.

நேர்காணல் முகவரி: கேந்திரிய வித்யாலயா சிவகங்கை, சீனிவாச நகர், பனங்காடி சாலை, சிவகங்கை-630561.

நேர்காணல் தேதி: மார்ச் 21 மற்றும் 22, 2025.

நேரம்: காலை 10 மணி.

நேர்காணல் முறை: நேரடி நேர்காணல் (Walk-in Interview).

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
Google Form பதிவு செய்யவும்Click Here
கல்வித் தகுதி விவரங்கள்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments