Indian Overseas Bank Apprentice Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இந்தியா முழுவதும் 750 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 175 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Overseas Bank Apprentice Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Indian Overseas Bank |
காலியிடங்கள் | 750 |
பணி | அப்ரண்டிஸ் (Apprentices) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 09.03.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.iob.in/Careers |
Indian Overseas Bank Apprentice Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டிஸ் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 750 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 175 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- அப்ரண்டிஸ் (Apprentices) – 750 காலியிடங்கள்
வகை வாரியாக / மாநில வாரியாக காலியிடங்கள்:
மாநில பெயர் | காலியிடங்கள் | ||||||||||
Delhi | 50 | ||||||||||
Uttarakhand | 15 | ||||||||||
Uttar Pradesh | 80 | ||||||||||
Bihar | 25 | ||||||||||
Chandigarh | 04 | ||||||||||
Chattisgarh | 16 | ||||||||||
Andaman and Nicobar Isl. | 01 | ||||||||||
Andhra Pradesh | 25 | ||||||||||
Arunachal Pradesh | 01 | ||||||||||
Assam | 04 | ||||||||||
Daman and Diu | 01 | ||||||||||
Gujarat | 25 | ||||||||||
Goa | 05 | ||||||||||
Himachal Pradesh | 01 | ||||||||||
Haryana | 15 | ||||||||||
Jammu and Kashmir | 01 | ||||||||||
Jharkhand | 07 | ||||||||||
Karnataka | 30 | ||||||||||
Kerala | 40 | ||||||||||
Manipur | 01 | ||||||||||
Meghalaya | 01 | ||||||||||
Maharashtra | 60 | ||||||||||
Mizoram | 01 | ||||||||||
Madhya Pradesh | 10 | ||||||||||
Nagaland | 01 | ||||||||||
Orissa | 24 | ||||||||||
Punjab | 21 | ||||||||||
Pondicherry | 22 | ||||||||||
Rajasthan | 25 | ||||||||||
Sikkim | 01 | ||||||||||
Telangana | 31 | ||||||||||
Tamil Nadu | 175 | ||||||||||
Tripura | 01 | ||||||||||
West Bengal | 30 | ||||||||||
மொத்த காலியிடம் | 750 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOB Apprentice Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்:
வகை | வயது தளர்வு |
SC / ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அப்ரண்டிஸ் பணிக்கு மெட்ரோ கிளைகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். நகர்ப்புற கிளைகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.12,000/- வழங்கப்படும். கிராமப்புற / அரை நகர்ப்புற கிளைகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு (புறநிலை வகை)
- உள்ளூர் மொழியின் அறிவு மற்றும் சோதனை
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரரின் வகை | தேர்வுக் கட்டணம் |
PwBD | Rs. 400/- plus GST (18%) = Rs. 472/- |
Female / SC / ST | Rs. 600/- plus GST (18%) = Rs. 708/- |
GEN / OBC / EWS | Rs. 800/- plus GST (18%) = Rs. 944/- |
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Overseas Bank Apprentice Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.03.2025 முதல் 09.03.2025 தேதிக்குள் https://www.iob.in/Careers இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |