HVF Avadi Junior Technician Recruitment 2025: இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சென்னை ஆவடியில் அமைந்துள்ள HVF கனரக வாகன தொழிற்சாலை, தற்போது காலியாக உள்ள 1850 Junior Technician (ஜூனியர் டெக்னீசியன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், அதற்கான கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு என்ன போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாகக் காண்போம்.
HVF Avadi Junior Technician Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ஆவடி கனரக வாகன தொழிற்சாலை Heavy Vehicles Factory, Avadi |
காலியிடங்கள் | 1850 |
பணிகள் | Junior Technician (ஜூனியர் டெக்னீசியன்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 19.07.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://avnl.co.in/ |
HVF Avadi Junior Technician Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Technician (ஜூனியர் டெக்னீசியன்) | 1850 |
வகை வாரியான காலியிட விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
HVF Junior Technician Recruitment 2025 கல்வித் தகுதி
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதிகள் தொடர்பான மேலும் விரிவான தகவல்களைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
HVF Junior Technician Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச வயது வரம்பு தளர்வுகள்:
விண்ணப்பதாரர் வகை | வயது வரம்புத் தளர்வு |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் (5 years) |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் (3 years) |
PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் (10 years) |
HVF Junior Technician Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை Junior Technician பணிக்கு Rs.21,000/-
HVF Junior Technician Recruitment 2025 தேர்வு செயல்முறை
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் Short Listing, Trade Test மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) ஆகிய நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
HVF Junior Technician Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- பெண்கள்/ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
HVF Avadi Junior Technician Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.06.2025 முதல் 19.07.2025 தேதிக்குள் https://oftr.formflix.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று, “Apply Online” பட்டனைக் கிளிக் செய்து, Register செய்ய வேண்டும். பின்பு Applicant Login பட்டனை கிளிக் செய்து Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |