BHU Junior Clerk Recruitment 2025: மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University) காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் (Junior Clerk) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
BHU Junior Clerk Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University) |
காலியிடங்கள் | 199 |
பணிகள் | ஜூனியர் கிளார்க் (Junior Clerk) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 17.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://bhu.ac.in/ |
BHU Junior Clerk Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- ஜூனியர் கிளார்க் (Junior Clerk) – 199 காலிப்பணியிடங்கள்
வகை வாரியான காலியிட விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஜூனியர் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஜூனியர் கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரங்கள்
மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் 63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஜூனியர் கிளார்க் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- எழுத்துத் தேர்வு (கணினி திறன் தேர்வு)
- திறன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
BHU Junior Clerk Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST, PwBDs & Women விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- UR, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
- கட்டண முறை: ஆன்லைன்
BHU Junior Clerk Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.03.2025 முதல் 17.04.2025 தேதிக்குள் https://bhu.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து இணைப்புகளுடன் சேர்த்து the Office of the Registrar, Recruitment & Assessment Cell, Holkar House, BHU, Varanasi -221005 (U.P.) என்ற முகவரிக்கு 22.04.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |