Ariyalur Sathunavu Thurai Jobs 2025: தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 178 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Ariyalur Sathunavu Thurai Jobs 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டம் தமிழ்நாடு அரசு சத்துணவு துறை |
காலியிடங்கள் | 178 |
பணிகள் | சமையல் உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 29.04.2025 |
பணியிடம் | அரியலூர் மாவட்டம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://Ariyalur.nic.in/ |
Ariyalur Sathunavu Thurai Jobs 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
சமையல் உதவியாளர் | 178 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sathunavu Thurai Jobs 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
Ariyalur Sathunavu Thurai Jobs 2025 வயது வரம்பு விவரங்கள்
- பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OC) ஆகியோர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
- பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
- விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
Ariyalur Sathunavu Thurai Jobs 2025 சம்பள விவரங்கள்
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.3,000/- வழங்கப்படும். இப்பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியம் (ஊதிய நிலை-1 (Level of Pay – ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
Ariyalur Sathunavu Amaipalar Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .
விண்ணப்பதாரர்கள் வேலை கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி – குறுவட்டம் – வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை)
Ariyalur Sathunavu Amaipalar Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
Ariyalur Sathunavu Thurai Jobs 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://ariyalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பிக்கவும். இதன் மூலம் தெரிவு செய்து கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.04.2025 பிற்பகல் 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் துறை மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் பொழுது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |