Thursday, February 6, 2025
Home12th Pass Govt Jobs12-ம் வகுப்பு படித்துள்ளீர்களா…UPSC தேசிய பாதுகாப்பு அகாடமி வேலைவாய்ப்பு 2025 - 406 பணியிடங்கள்; உடனே...

12-ம் வகுப்பு படித்துள்ளீர்களா…UPSC தேசிய பாதுகாப்பு அகாடமி வேலைவாய்ப்பு 2025 – 406 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க! UPSC NDA 1 Recruitment 2025

UPSC NDA 1 Recruitment 2025: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி (ராணுவம், கடற்படை, விமானப்படை), கடற்படை அகாடெமி ஆகியவற்றில் காலியாக உள்ள 406 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)
தேசிய பாதுகாப்பு அகாடெமி
காலியிடங்கள்406
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://upsc.gov.in/

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2024 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு அகாடெமிNational Defence Academy (NDA) பணியிடங்கள்:

  • Army: 208 காலியிடங்கள் (பெண்களுக்கான 10 உட்பட)
  • Navy: 42 காலியிடங்கள் (பெண்களுக்கான 6 உட்பட)
  • Air Force (i) Flying: 92 காலியிடங்கள் (பெண்களுக்கான 2 உட்பட)
  • Air Force (ii) GD (Tech): 18 காலியிடங்கள் (பெண்களுக்கான 2 உட்பட)
  • Air Force (iii) GD (Non-Tech): 10 காலியிடங்கள் (பெண்களுக்கு 2 உட்பட)

கடற்படை அகாடெமி – Naval Academy பணியிடங்கள்:

  • 36 காலியிடங்கள் (பெண்களுக்கு 5 உட்பட)

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • NDA Army துறை பணிக்கு 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • NDA Air Force and Naval துறை பணிக்கு 12-ம் வகுப்பு/HSC பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 2-07-2006-ம் ஆண்டுக்கு முன்பாகவோ, 1-07-2009-ம் ஆண்டுக்கு பின்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் Intelligence and Personality Test ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

CategoryApplication Fee
ST/SC/Female விண்ணப்பதாரர்களுக்குகட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரர்களுக்குRs. 100/- 
கட்டண முறை:ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் (https://upsc.gov.in/) இணையதளம் மூலம் 11.12.2024 முதல் 31.12.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 11.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments