Monday, May 19, 2025
Home10th Pass Govt Jobs10ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 - 3935...

10ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 – 3935 காலியிடங்கள்; ரூ.19,500 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2025

TNPSC Group 4 Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3935 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு – III), உதவியாளர், கள உதவியாளர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் வனக் காப்பாளர், வனக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
Tamil Nadu Public Service Commission
காலியிடங்கள்3935
பணிகிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் வனக் காப்பாளர், ஓட்டுநர்,
சுருக்கெழுத்து தட்டச்சர், வனக் காவலர்,
கள உதவியாளர், நேர்முக எழுத்தர், உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.05.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnpsc.gov.in/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி வாரியான காலியிடங்கள் விபரம்

பதவியின் பெயர்துறை பெயர்காலியிடம்
கிராம நிர்வாக அலுவலர்தமிழ்நாடு அமைச்சுப் பணி215
இளநிலை உதவியாளர் தமிழ்நாடு அமைச்சுப் பணி /
நீதி அமைச்சுப் பணி
1621
இளநிலை உதவியாளர்தமிழ்நாடு ஆதி திராவிடர்
வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்
6
இளநிலை உதவியாளர்தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்5
இளநிலை உதவியாளர்தமிழ்நாடு அமைச்சுப் பணி46
இளநிலை வருவாய் ஆய்வாளர்தமிழ்நாடு அமைச்சுப் பணி239
இளநிலை செயல் பணியாளர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு இணையம்
1
இளநிலை உதவியாளர்
மற்றும் தட்டச்சர்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்1
தட்டச்சர்சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்1
தட்டச்சர்தமிழ்நாடு அமைச்சுப் பணி /
நீதி அமைச்சுப் பணி /
தலைமைச் செயலகப் பணி /
சட்ட மன்றப் பேரவை செயலகப் பணி
1099
தட்டச்சர்தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்1
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை – III)தமிழ்நாடு அமைச்சுப் பணி /
நீதி அமைச்சுப் பணி
335
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை – III)தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்2
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை – III)தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட
மேம்பாட்டு வாரியம்
4
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை – III)சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்10
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை – III)தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்17
நேர்முக எழுத்தர்தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்2
உதவியாளர்தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்54
கள உதவியாளர்தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்19
வனக் காப்பாளர்தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி62*
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி35*
வனக் காவலர்தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி71*
வனக் காவலர்
(பழங்குடியினர் இளைஞர்)
தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி24*
வனக் காப்பாளர்தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்15
வனக் காவலர்தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்50
மொத்தம்3935
  • இந்த விவரங்கள் விண்ணப்பத்தாரர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஏற்ப மாறுபடலாம்.
  • இந்த விவரங்கள் விண்ணப்பத்தாரர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஏற்பவும், காலிப்பணியிடங்களின் குறைப்பு அல்லது கூட்டலுக்கும் உள்ளாக்கப்படலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர்கல்வித் தகுதி
கிராம நிர்வாக அலுவலர்குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர்பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் 1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
2. கூட்டுறவுப் பயிற்சிச் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கணினியில் அலுவலகப் தானியங்காக்கல் சான்றிதழ்” பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. தட்டச்சு – ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர்1. குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. அரசு தொழில்நுட்பக் கல்வித் தேர்வில் கீழ்க்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்:
அ. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (முதுநிலை) அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை
ஆ. ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கணினியில் அலுவலகப் தானியங்காக்கல் சான்றிதழ்” பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்துத் தட்டச்சர்
(நிலை – III)
1. குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. அரசு தொழில்நுட்பக் கல்வித் தேர்வில் சுருக்கெழுத்துத் தேர்வில் கீழ்க்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்: அ. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
ஆ. தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
இ. ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கணினியில் அலுவலகப் தானியங்காக்கல் சான்றிதழ்” பெற்றிருக்க வேண்டும்.
நேர்முக எழுத்தர்1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. அரசு தொழில்நுட்ப தட்டச்சுத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும்
3. அரசு தொழில்நுட்ப சுருக்கெழுத்து தேர்வில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர்1. இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்பட்ட “கணினியில் அலுவலக தானியங்காக்கல் சான்றிதழ்” பெற்றிருக்க வேண்டும்.
கள உதவியாளர்பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வனக் காப்பாளர்1. மேல்நிலைக் கல்வி (Higher Secondary Course)-யில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. ஏனைய தகுதி உடையோர்களில் இராணுவத்திலிருந்து (தரைப்படையினிடமிருந்து) பணிநீக்கம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஓட்டுநர் உரிமத்துடன்
கூடிய வனக் காப்பாளர்
1. மேல்நிலைக் கல்வி (Higher Secondary Course)-யில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தகுதி பெற்ற அலுவலரால் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
3. ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே தகுதியுள்ள ஒரு நிறுவனத்தில் இலகுரக வாகனங்கள் அல்லது கனரக வாகனங்கள் இயக்குவதில் குறைந்தது மூன்று வருட காலப் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
4. வாகன செயல்பாடுள் அடிப்படை அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
5. தமிழ்நாட்டில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதலுதவி சான்றிதழினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
6. ஏனைய தகுதிகள் இணையாக இருக்கும் இராணுவத்திலிருந்து (தரைப்படையினில் பணிபுரிபவர்கள் மட்டும்) வெளியேறியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
வனக் காவலர்1. குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்)2. ஏனைய தகுதிகள் இணையாக இருக்கும் இராணுவத்திலிருந்து (தரைப்படையினில் பணிபுரிபவர்கள் மட்டும்) வெளியேறியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
வனக் காப்பாளர்மேல்நிலைக் கல்வி (பன்னிரெண்டாம் வகுப்பு)-இல் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வனக் காவலர்குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி (அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி)

கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான வயது வரம்பு விவரங்கள்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.

வகைஅதிகபட்ச வயது
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs,
BCMs மற்றும்
ஆதரவற்ற விதவைகள்
37 ஆண்டுகள்
மற்றவர்கள்32 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர்அதிகபட்ச வயது 53 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள்42 ஆண்டுகள்

பிற பதவிகளுக்கான வயது வரம்பு விவரங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

வகைஅதிகபட்ச வயது
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)1 மற்றும் ஆதரவற்ற விதவைகள்37 ஆண்டுகள்
மற்றவர்கள்32 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர்அதிகபட்ச வயது 53 ஆண்டுகள் (அவர்கள் வகித்த பதவியைப் பொறுத்து மாறுபடலாம்)
மாற்றுத்திறனாளிகள்42 ஆண்டுகள்

குறிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மேலும் விவரங்கள் அல்லது மாற்றங்கள் இருக்கலாம். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்ப்பது அவசியம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர்சம்பளம்
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (பாதுகாப்பற்றது & பாதுகாப்பு), இளநிலை உதவியாளர், தட்டச்சர்ரூ. 19,500 – 71,900
இளநிலை உதவியாளர், தட்டச்சர்ரூ. 19,500 – 62,000
சுருக்கெழுத்துத் தட்டச்சர் (கிரேடு – III)ரூ. 20,600 – 75,900
சுருக்கெழுத்து தட்டச்சர்ரூ. 20,600 – 65,500
நிர்வாக இயக்குநர்/பொது மேலாளர் (சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு 3) அவர்களின் தனி உதவியாளர், இளநிலை நிர்வாகி (அலுவலகம்/தட்டச்சு)ரூ. 19,500 – 62,000
வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்ரூ. 18,200 – 57,900
வனக் கவனிப்பாளர், வனக் கவனிப்பாளர் (பழங்குடியின இளைஞர்)ரூ. 16,600 – 52,400

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. எழுத்துத் தேர்வு: OMR தாள்களைப் பயன்படுத்தி ஆஃப்லைன் முறையில்.
  2. ஆவண சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை (Document Verification and Counselling)
விவரங்கள்கட்டணம்
One-Time Registration FeeRs. 150
Preliminary Examination FeeRs. 100
Main Written Examination FeeRs. 200
SC/ SC (Arunthathiyars)/ ST/
PwBD/ Destitute Widow
கட்டணம் இல்லை
MBC/ Denotified Communities/
BC (Other than Muslim)/ BC (Muslim)
3 Free Chances
Ex-Servicemen2 Free Chances
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 25.04.2025 முதல் 24.05.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

TNPSC குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil PDFClick Here
TNPSC குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு English PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments