TNCSC Madurai Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு காலியாக உள்ள 450 பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill clerk), பருவகால உதவுபவர் (Seasonal Helper) பதவிக்கு ஆண் மற்றும் பெண்களிடமிருந்தும், பருவகால காவலர் (Seasonal watchman) பணிக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்:
பொது விநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டிட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972 ஆம் ஆண்டு அன்றைய மாண்புமிகு முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலத்தில் வசிக்கும் மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இது போன்ற அமைப்பை நாட்டிலேயே முதன் முதலில் அமைத்த பெருமைக்குரியது தமிழ்நாடு.
TNCSC Madurai Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் TNCSC(Tamil Nadu Civil Supplies Corporation) |
காலியிடங்கள் | 450 |
பணிகள் | பருவகால பட்டியல் எழுத்தர்(Bill Clerk), பருவகால உதவுபவர்(Helper), பருவகால காவலர்(Watchman) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 28.02.2025 |
பணியிடம் | மதுரை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tncsc.tn.gov.in/ |
TNCSC Madurai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk) (பெண்கள் உட்பட) | 150 |
பருவகால உதவுபவர் (Seasonal Helper) (பெண்கள் உட்பட) | 150 |
பருவகால காவலர் (Seasonal Watchman) (ஆண்கள் மட்டும்) | 150 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNCSC Madurai Recruitment 2025 கல்வித் தகுதி
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk) அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இளங்கலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால உதவுபவர் (Seasonal Helper) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால காவலர் (Seasonal Watchman) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
SC & SCA/ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
BC/BC(M)/MBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
OC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk) (பெண்கள் உட்பட) | Rs.5,285+ DA (Rs.5087/-) +TA |
பருவகால உதவுபவர் (Seasonal Helper) (பெண்கள் உட்பட) | Rs. 5,218 + DA (Rs.5087/-) +TA |
பருவகால காவலர் (Seasonal Watchman) (ஆண்கள் மட்டும்) | Rs. 5,218 + DA (Rs.5087/-) +TA |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
TNCSC Madurai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க மதுரை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் (Email-id) முகவரியினை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அனைத்து தொடர்புகளும் (அழைப்பு கடிதம் போன்றவை) மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2025 மேலும் 28.02.2025 அன்று மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி:
துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், த.நா.நு.பொ.வா.கழகம்,
லெவல் 4 பில்டிங், 2-வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், மதுரை-625 002.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.02.2025.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025