TN TRB Recruitment 2025: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் காலியாக உள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் (Post Graduate Assistant), உடற்கல்வி இயக்குநர் நிலை-1 (Physical Director Grade-I), மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 (Computer Instructor Grade-I) ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.08.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
TN TRB Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் Teachers Recruitment Board |
காலியிடங்கள் | 1996 |
பணி | முதுகலை ஆசிரியர்கள் கணினி பயிற்றுநர் உடற்க்லவி இயக்குநர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 12.08.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://trb.tn.gov.in/ |
TN TRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆட்சேர்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
முதுகலை ஆசிரியர்கள் | 1837 |
கணினி பயிற்றுநர் | 57 |
உடற்க்லவி இயக்குநர் | 102 |
மொத்தம் | 1996 |
முதுகலை ஆசிரியர் பாட வாரியாக மற்றும் துறை வாரியாக காலிப்பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்கள்
பாடம் | காலிப்பணியிடம் |
தமிழ் | 216 |
ஆங்கிலம் | 197 |
கணிதம் | 232 |
இயற்பியல் | 233 |
வேதியியல் | 217 |
தாவரவியல் | 147 |
விலங்கியல் | 131 |
வணிகவியல் | 198 |
பொருளியல் | 169 |
வரலாறு | 68 |
புவியியல் | 15 |
அரசியல் அறிவியல் | 14 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TRB PG Assistant Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பபட்டுள்ளது
- சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Post Graduate Degree) பெற்றிருக்க வேண்டும். அதனுடன், இளங்கலை கல்வியியல் பட்டம் (B.Ed.) பெற்றிருக்க வேண்டும்.
- உடற்க்லவி இயக்குநர் பதவிக்கு B.P.Ed அல்லது BPE அல்லது உடல்நலம் மற்றும் உடற்கல்வி பாடத்தில் B.Sc முடித்திருக்க வேண்டும். M.P.Ed முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- கணினி பயிற்றுநர் பதவிக்கு முதுகலை பட்டம் மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும். முழுமையான கல்வித்தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
TRB PG Assistant Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்றுள்ளபடி அதிகபட்சமாக 53 வயது வரை இருக்கலாம். ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (BCM) மற்றும் சீர் மரபினர் (DNC) பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
TRB PG Assistant Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பதவியின் பெயர் | சம்பளம் |
இணைப் பேராசிரியர் | ரூ.1,31,400-2,17,100/- |
உதவிப் பேராசிரியர் | ரூ.68,900-2,05,500/- |
உதவிப் பேராசிரியர் (Pre – Law) | ரூ.57,700-1,82,400/- |
Tamilnadu Teachers Recruitment Board Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்:
- கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
- எழுத்துத் தேர்வு (Written Examination)
- ஆவணச் சரிபார்ப்பு (Document Verification)
Tamilnadu Teachers Recruitment Board Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600/-
- கட்டண முறை: ஆன்லைன்
TN TRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.07.2025 முதல் 12.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பம் ஜூலை 10 முதல் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை திருத்த ஆகஸ்ட் 13 முதல் 16 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |