TN MRB Nursing Assistant Recruitment 2026

தமிழ்நாடு சுகாதார துறையில் வேலைவாய்ப்பு 2026 – 999 காலியிடங்கள்.. சம்பளம் ரூ.58,100 || தேர்வு கிடையாது! TN MRB Nursing Assistant Recruitment 2026

TN MRB Nursing Assistant Recruitment 2026: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) துறையில் காலியாக உள்ள 999 Nursing Assistant Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்:

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
Tamil Nadu Medical Recruitment Board (TN MRB)
காலியிடங்கள்999
பணிகள்Nursing Assistant Grade II
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி08.02.2026
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://mrb.tn.gov.in/

மிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB), மருத்துவத் துறையில் காலியாக உள்ள செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள் இதோ:

பதவியின் பெயர்காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
Nursing Assistant Grade II999

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழக அரசின் மருத்துவ நிறுவனங்களில் Nursing Assistant பணிக்கான பயிற்சிப் படிப்பை (Training Course) முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

TN MRB தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள்

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் (அனைத்து பிரிவினருக்கும்).
  • அதிகபட்ச வயது: SC / ST / SC(A) / BC / BCM / MBC மற்றும் DNC பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
  • பிற பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.

TN MRB தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் அரசு விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

  • சம்பளம்: ரூ. 15,700 – 58,100/- (Level 1)

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

TN MRB தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. மதிப்பெண் பட்டியல் (Merit List): கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் (Weightage of marks) முன்னுரிமை அளிக்கப்படும்.
  2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification): தகுதியானவர்கள் நேரில் அழைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

குறிப்பு: இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்:

  • SC / SCA / ST / DAP (மாற்றுத்திறனாளிகள்) / DW (ஆதரவற்ற விதவைகள்): ரூ. 300/-
  • இதர பிரிவினர் (General/BC/MBC/others): ரூ. 600/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.01.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2026

TN MRB தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 19.01.2026 முதல் 08.02.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top