Wednesday, July 16, 2025
HomeAny Degree Govt Jobsரூ.35,400 சம்பளத்தில் நீதிமன்றத்தில் இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலை..டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Supreme Court...

ரூ.35,400 சம்பளத்தில் நீதிமன்றத்தில் இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலை..டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Supreme Court of India Recruitment 2025

Supreme Court of India Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள 26 Junior Court Assistant -cum- Junior Programmer, Senior Court Assistant -cum- Senior Programmer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய உச்ச நீதிமன்றம்
காலியிடங்கள்26
பணிJunior Court Assistant -cum- Junior Programmer,
Senior Court Assistant -cum- Senior Programmer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி27.06.2025
பணியிடம்இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.sci.gov.in/recruitments/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Senior Court Assistant -cum- Senior Programmer06
Junior Court Assistant -cum- Junior Programmer20
மொத்தம்26

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்: Senior Court Assistant -cum- Senior Programmer

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் (B.E.) / இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech.) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் கணினிமயமாக்கல் துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் அல்லது
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் (MCA) / கணினி அறிவியலில் M.Sc பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் கணினிமயமாக்கல் துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் அல்லது
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியலில் B.Sc. / கணினி பயன்பாட்டில் இளங்கலை (BCA) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் கணினிமயமாக்கல் துறையில் 7 ஆண்டுகள் அனுபவம்.

பணியின் பெயர்: Junior Court Assistant -cum- Junior Programmer

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் (B.E.) / இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech.) / கணினி அறிவியலில் B.Sc. / கணினி பயன்பாட்டில் இளங்கலை (BCA) பட்டம் அல்லது அதற்கு இணையானது.

இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
பதவியின் பெயர்சம்பள வரம்பு
Senior Court Assistant -cum- Senior Programmerரூ.47,600/-
Junior Court Assistant -cum- Junior Programmerரூ. 35,400/-

இந்திய உச்ச நீதிமன்றம் 2025-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  1. Written (Objective Type) Test comprising questions relating to General English, General Awareness, Reasoning and Quantitative Aptitude
  2. Objective Type Technical Aptitude Test
  3. Practical Aptitude Test
  4. Interview
  • ST/ SC/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD/ சுதந்திரப் போராட்ட தியாகிகள்: ரூ. 250/-
  • பொது/ OBC பிரிவினர்: ரூ. 1,000/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.06.2025 முதல் 27.06.2025 தேதிக்குள் www.sci.gov.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments