SSC Recruitment 2025: மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) தற்போது காலியாக உள்ள 261 Stenographer Grade ‘C’ & ‘D’ (சுருக்கெழுத்தர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
SSC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பணியாளர் தேர்வு ஆணையம் Staff Selection Commission |
காலியிடங்கள் | 261 |
பணிகள் | Stenographer Grade ‘C’ & ‘D’ சுருக்கெழுத்தர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 26.06.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.gov.in/ |
SSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
SSC மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Stenographer Grade ‘C’ & ‘D’ (சுருக்கெழுத்தர்)
காலியிடங்கள்: 261
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC Stenographer Recruitment 2025 கல்வித் தகுதி
SSC மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் Stenographer பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SSC Stenographer Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
SSC மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
சுருக்கெழுத்தர் நிலை ‘D’ (Stenographer Grade ‘D’): 18 முதல் 27 வயது வரை. அதாவது, 1998 ஆகஸ்ட் 2 முதல் 2007 ஆகஸ்ட் 1-க்கு இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சுருக்கெழுத்தர் நிலை ‘C’ (Stenographer Grade ‘C’): 18 முதல் 30 வயது வரை. அதாவது, 1995 ஆகஸ்ட் 2 முதல் 2007 ஆகஸ்ட் 1-க்கு இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உச்ச வயது வரம்பில் தளர்வு:
பல்வேறு பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு தளர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- SC/ ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
SSC Stenographer Recruitment 2025 சம்பள விவரங்கள்
SSC மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- சுருக்கெழுத்தர் நிலை ‘C’ (Stenographer Grade ‘C’): அடிப்படை சம்பளம் (Basic Pay): ₹35,400/-
- சுருக்கெழுத்தர் நிலை ‘D’ (Stenographer Grade ‘D’): அடிப்படை சம்பளம் (Basic Pay): ₹35,400/-
SSC Stenographer Recruitment 2025 தேர்வு செயல்முறை
SSC மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Computer Based Examination
- Skill Test and Certificate Verification
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, சேலம், மற்றும் வேலூர்.
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள்/ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
SSC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
SSC மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.06.2025 முதல் 26.06.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |