Social Welfare and Women Empowerment Department Recruitment 2024: தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் பிரத்யேகமாக பெண்களுக்கான உதவி எண் அழைப்பு 181 (Women Help Line) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலியாக உள்ள 10 கால் ரெஸ்பாண்ட்டர் (Call Operator), பல்துறை பணியாளர் (Multi-Purpose Staff), இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் (Security/Night Guard) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழக அரசு பெண்கள் உதவி எண் 181 |
காலியிடங்கள் | 10 |
பணி | கால் ரெஸ்பாண்ட்டர் (Call Operator) பல்துறை பணியாளர் (Multi-Purpose Staff) இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் (Security/Night Guard) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.11.2024 |
பணியிடம் | சென்னை தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnsocialwelfare.tn.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு பெண்கள் உதவி எண் 181 வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- கால் ரெஸ்பாண்ட்டர் (Call Operator) – 05 காலியிடங்கள்
- பல்துறை பணியாளர் (Multi-Purpose Staff) – 02 காலியிடங்கள்
- இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் (Security/Night Guard) – 03 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- பல்துறை பணியாளர் (Multi-Purpose Staff) பதவிக்கு கல்வித் தகுதி தேவையில்லை., சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். முன் அனுபவம் தேவை.
- பாதுகாப்பு காவலர் (Security/Night Guard) பதவிக்கு கல்வித் தகுதி தேவையில்லை.. சென்னையை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அனுபவம் தேவை. ராணுவத்தில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை.
- கால் ரெஸ்பாண்ட்டர் (Call Operator) பதவிக்கு சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல் அல்லது பொது நிர்வாகம் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேறு ஏதேனும் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிய வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
- கால் ரெஸ்பாண்ட்டர் (Call Operator) பணிக்கு விண்ணப்பதார் 35 வயதிற்கு இருத்தல் வேண்டும்.
- பல்துறை பணியாளர் (Multi-Purpose Staff) பணிக்கு விண்ணப்பதார் 55 வயதிற்கு கீழ் இருத்தல் வேண்டும்.
- இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் (Security/Night Guard) பணிக்கு விண்ணப்பதார் 55 வயதிற்கு கீழ் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
- கால் ரெஸ்பாண்டர் (Call Operator):மாதச் சம்பளம்: ரூ.16,500/-
- பல்துறை பணியாளர் (Multi-Purpose Staff): மாதச் சம்பளம்: ரூ.15,000/-
- இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் (Security/Night Guard): மாதச் சம்பளம்: ரூ.12,000/-
தேர்வு செயல்முறை
விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழக அரசு பெண்கள் உதவி எண் 181 வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.11.2024 முதல் 11.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். அரசுப் பணியில் ஆர்வமுள்ள தகுதியானவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10ஆம் வகுப்பு போதும் மாதம் ரூ.69100 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை – 455 காலியிடங்கள்! IB Security Assistant Motor Transport Recruitment 2025
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! TNSTC Recruitment 2025
- பெல் நிறுவனத்தில் வேலை – 610 காலியிடங்கள் || ரூ. 30,000 சம்பளம்! BEL Recruitment 2025
- தமிழ்நாடு வனத்துறை துறையில் வேலை – ரூ.15,000 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Forest Department Recruitment 2025
- 8வது போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.58,100 சம்பளம் || தேர்வு கிடையாது! Vellore Highway Dept Recruitment 2025