Railway Group D Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் ‘D’ பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. RRB குரூப் D ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 32438 குரூப் D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Railway Group D Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
காலியிடங்கள் | 32438 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 01.03.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbapply.gov.in/ |
Railway Group D Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ரயில்வே துறை குரூப்-டி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- குரூப் D (Group D) – 32438 காலிப்பணியிடங்கள்
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்:
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
பாண்ட்மேன் B:5 | 58 |
உதவியாளர் (Track Machine) | 799 |
உதவியாளர் (Bridge) | 301 |
டிராக் மெயிண்டனர் Gr. IV Engineering | 13,187 |
உதவியாளர் P-Way | 257 |
உதவியாளர் (C&W) | 2,587 |
உதவியாளர் TRD Electrical | 1,381 |
உதவியாளர் (S&T) S&T | 2,012 |
லோகோ செட் உதவியாளர் (Diesel) | 420 |
லோகோ செட் உதவியாளர் (Electrical) | 950 |
ஆப்ரேட்டர் உதவியாளர் (Electrical) | 744 |
உதவியாளர் TL & AC | 1041 |
உதவியாளர் TL & AC (Workshop) | 624 |
உதவியாளர் (Workshop)(Mech) | 3,077 |
மொத்தம் | 32,438 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
ரயில்வே குரூப்-டி பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது தேர்ச்சி (அல்லது) ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
ரயில்வே குரூப்-டி பதவிகளுக்கு 01.01.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 36 வயது வரை இருக்கலாம். ரயில்வே விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரங்கள்
ரயில்வே குரூப்-டி பணியிடங்களுக்கு 7வது ஊதியக் குழுவின் படி, நிலை – 1 அளவில் சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்.
தேர்வு செயல்முறை
ரயில்வே குரூப்-டி பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
RRB Group D Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD/Women/Ex-Serviceman/Transgender/ விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 250/- கணினி அடிப்படையிலான தேர்வின் போதும் விண்ணப்ப கட்டணம் ரூ.250 திருப்பி கொடுக்கப்படும்.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/- கணினி அடிப்படையிலான தேர்வின் போதும் விண்ணப்ப கட்டணம் ரூ.400 திருப்பி கொடுக்கப்படும்.
- கட்டண முறை: ஆன்லைன்
Railway Group D Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இரயில்வே துறை குரூப் D வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.03.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் https://www.rrbapply.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |