Punjab National Bank Recruitment 2025: நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள 09 வாடிக்கையாளர் சேவை அசோசியேட், அலுவலக உதவியாளர் (விளையாட்டு வீரர்-ஆண்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 24.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரங்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, மற்றும் தேர்வு செயல்முறைகளை இந்த தகவல் தொகுப்பில் விரிவாக வழங்கியுள்ளோம். தகுதி உடையவர்கள் அவற்றைப் படித்து, தேவையான பதிவுகளை செய்யலாம்.
Punjab National Bank Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | பஞ்சாப் தேசிய வங்கி |
| காலியிடங்கள் | 09 |
| பணிகள் | வாடிக்கையாளர் சேவை அசோசியேட் அலுவலக உதவியாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 24.01.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.pnbindia.in/ |
காலியிடங்கள் விவரம்
பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical)
- அலுவலக உதவியாளர் (Subordinate)
மொத்த காலியிடங்கள் – 09 இடங்கள்
கல்வித் தகுதி
- வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் (Subordinate) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: ஹாக்கி வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விளையாட்டு தகுதி: பின்வரும் விளையாட்டு தகுதிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெற்றிருக்க வேண்டும்:
- தேசிய அல்லது சர்வதேச ஹாக்கி போட்டிகளில் மாநில அல்லது தேசிய அளவில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள்.
- பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு வாரியங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டிகளில் தங்கள் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்கள்.
- அகில இந்தியா பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்படும் தேசிய பள்ளி விளையாட்டு/போட்டிகளில் மாநில பள்ளி அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்கள்.
வயது வரம்பு விவரங்கள்
- வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical) பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- அலுவலக உதவியாளர் (Subordinate) பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
| வகை | வயது தளர்வு |
| SC/ST | 5 years |
| OBC | 3 years |
| PwBD (Gen/EWS) | 10 years |
| PwBD (SC/ST) | 15 years |
| PwBD (OBC) | 13 years |
| Ex-Servicemen | As per Govt.Policy |
சம்பள விவரங்கள்
- வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,050/- முதல் ரூ.64,480/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- அலுவலக உதவியாளர் (Subordinate) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.37,815/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விளையாட்டு செயல்திறன் / கள சோதனைகள் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Punjab National Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை www.pnbindia.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பிரதி எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 24.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Chief Manager (Recruitment Section), Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4, Sector 10, Dwarka, New Delhi -110075
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 03.01.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:24.01.2025
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026












