Punjab and Sind Bank Recruitment 2025: பஞ்சாப் & சிந்து வங்கி (P&SB) இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியான இந்த வங்கி தற்போது காலியாக உள்ள 110 Local Bank Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Punjab and Sind Bank Recruitment 2025
Description | Details |
துறைகள் | பஞ்சாப் & சிந்து வங்கி |
காலியிடங்கள் | 110 |
பணி | Local Bank Officer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | punjabandsindbank.co.in |
Punjab and Sind Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உள்ளூர் வங்கி அதிகாரிகள் (Local Bank Officers) – 110 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Punjab and Sind Bank Recruitment 2025 கல்வித் தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி Local Bank Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது வரம்பு தளர்வு |
SC/ ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen/ EWS) | 10 years |
PwBD (SC/ ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
சம்பள விவரங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி Local Bank Officers பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் Rs.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
பஞ்சாப் & சிந்து வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Screening, Personal Interview, Final Merit List, Proficiency in Local Language, Final Selection ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PwBD விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.850/-
Punjab and Sind Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் & சிந்து வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் https://punjabandsindbank.co.in/ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களும் இணைத்து 07.02.2025 முதல் 28.02.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |