NMDFC Recruitment 2025: தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தில் காலியாக உள்ள 10 Assistant Manager, Executive Assistant, Deputy Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NMDFC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (NMDFC) National Minorities Development & Finance Corporation (NMDFC) |
காலியிடங்கள் | 10 |
பணி | Assistant Manager, Executive Assistant, Deputy Manager (CS) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 02.06.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nmdfc.org/recruitment |
NMDFC Recruitment 20255 காலிப்பணியிடங்கள்
தேசிய சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Deputy Manager (CS) – Company Secretary | 01 |
Assistant Manager (Project, Coordination & Legal and Recovery) | 02 |
Assistant Manager (Finance and Accounts) | 01 |
Assistant Manager (HRM and Admin) | 01 |
Executive Assistant (General cadre) | 05 |
மொத்தம் | 10 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NMDFC Recruitment 2025 கல்வித் தகுதி
1. பணியின் பெயர்: Deputy Manager (CS) – Company Secretary
- கல்வி தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Arts, Science, அல்லது Commerce பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய கம்பெனி செயலாளர்கள் நிறுவனத்தில் (Indian Institute of Company Secretaries) உறுப்பினராக இருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மேற்பார்வை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (31.01.2025 தேதியின்படி அனுபவம் கணக்கிடப்படும்).
2. பணியின் பெயர்: Assistant Manager (AM) (Project, Coordination & legal and Recovery)
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Arts/ Science/ Commerce/ Agricultural Science/ Statistics/ Management/ Economics & Accountancy/ Banking & Finance ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் அல்லது Bachelor of Engineering (BE) பட்டம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Assistant Manager (Finance and Accounts)
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Commerce/Eco/Stat. துறையில் முதுகலைப் பட்டம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Assistant Manager (HRM and Admin)
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து Personnel Management and Industrial Relation/HR துறையில் முதுகலைப் பட்டம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Executive Assistant (General cadre)
- கல்வி தகுதி:
- Arts/ Science/ Commerce பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
Deputy Manager (CS) – Company Secretary | 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Assistant Manager (Project, Coordination & Legal and Recovery) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Assistant Manager (Finance and Accounts) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Assistant Manager (HRM and Admin) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Executive Assistant (General cadre) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
வயது தளர்வு:
- SC/ ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Deputy Manager (CS) – Company Secretary | மாதம் ரூ.40,000 – ரூ.1,40,000 |
Assistant Manager (Project, Coordination & Legal and Recovery) | மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 |
Assistant Manager (Finance and Accounts) | மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 |
Assistant Manager (HRM and Admin) | மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 |
Executive Assistant (General cadre) | மாதம் ரூ.25,000 – ரூ.95,000 |
தேர்வு செயல்முறை
தேசிய சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு கழகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Online Written Exam
- Interview
விண்ணப்ப கட்டணம்:
Deputy Manager மற்றும் Assistant Manager பதவிக்கு:
- ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.600/-
Executive Assistant பதவிக்கு:
- ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.200/-
NMDFC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 03.05.2025 முதல் 02.06.2025 தேதிக்குள் https://nmdfc.org/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |