NHDC Recruitment 2025: தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் தற்போது காலியாக உள்ள 08 Junior Officer (இளநிலை அலுவலர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NHDC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | National Handloom Development Corporation Ltd (NHDC) தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் |
காலியிடங்கள் | 08 |
பணி | Junior Officer (இளநிலை அலுவலர்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 24.05.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nhdc.org.in/ |
NHDC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தற்போது நிரப்பப்பட உள்ள பணியின் பெயர் இளநிலை அலுவலர் ஆகும். இந்த பதவிக்கு தற்போது 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த காலியிடங்களின் எண்ணிக்கை நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
NHDC Recruitment 2025 கல்வித் தகுதி
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Any Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், ஆங்கில தட்டச்சுத் தேர்வில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் (MS Office) மற்றும் இணைய பயன்பாடு (usage of internet) போன்ற கணினி சார்ந்த அடிப்படை அறிவு அவசியம்.
வயது வரம்பு விவரங்கள்
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத் தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்படும்.
வயது தளர்வு
அரசாங்க விதிகளின்படி, பின்வரும் பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்படுகிறது:
- SC/ST பிரிவினர் – 5 ஆண்டுகள்
- OBC பிரிவினர் – 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS) பிரிவினர் – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) பிரிவினர் – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) பிரிவினர் – 13 ஆண்டுகள்
வயது தளர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து, உங்கள் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும்.
சம்பள விவரங்கள்
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் இளநிலை அலுவலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 20,000 முதல் ரூ. 70,000 வரை வழங்கப்படும். இது அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகள் உள்ளடக்கியது. சம்பளம் குறித்த மேலும் விரிவான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தேர்வு செயல்முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Typewriting Test
- Group Discussion
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.05.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025
- Hardcopy ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2025
NHDC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் (National Handloom Development Corporation – NHDC) 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில், NHDC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.nhdc.org.in-க்குச் சென்று 05.05.2025 முதல் 16.05.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் அச்சு நகலை (hardcopy) எடுத்து, அதனுடன் சுய கையொப்பமிட்ட அனைத்து ஆதரவு ஆவணங்களையும் (வயதுச் சான்று, சாதிச் சான்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் ஊதியச் சான்றிதழ்) இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். உங்களது விண்ணப்பங்கள் அனைத்து ஆவணங்களுடன் வரும் ஜூன் 3, 2025 அல்லது அதற்கு முன் பின்வரும் முகவரிக்கு சென்றடையும்படி அனுப்பவும்: Dy. Manager (HR), National Handloom Development Corporation Ltd (NHDC), A2 to A5, Udyog Marg, Sector 2, Noida-201301 (U.P.).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை கவனமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும். தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.