NITTTR Chennai Recruitment 2025: சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( NITTTR ), இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழகமாகும். NITTTR சென்னையில் காலியாக உள்ள 12 சீனியர் நூலகர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி (ASO) (இந்தி மொழிபெயர்ப்பாளர்), தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு II (கன்சோல் ஆபரேட்டர்), சீனியர் செயலக உதவியாளர் (ஸ்டெனோகிராஃபர்), ஜூனியர் செயலக உதவியாளர் (JSA), மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு I (கேமராமேன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
NITTTR Chennai Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | National Institute Of Technical Teachers Training And Research (NITTTR) |
காலியிடங்கள் | 12 |
பணிகள் | Engineer மற்றும் Supervisor |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மற்றும் தபால் மூலம் |
கடைசி தேதி | 24.06.2025 |
பணியிடம் | சென்னை தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nitttrc.ac.in/nitttr/index.php |
NITTTR Chennai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
NITTTR தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Sr. Librarian | 01 |
Senior Technical Officer | 01 |
Technical Officer | 01 |
Technical Officer | 02 |
Assistant Section Officer (ASO) (Hindi Translator) | 01 |
Technical Assistant Gr. II (Console Operator) | 01 |
Senior Secretariat Assistant (Stenographer) | 02 |
Junior Secretariat Assistant (JSA) | 02 |
Technical Assistant Gr.I (Cameraman) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NITTTR Chennai Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Junior Secretariat Assistant (JSA) | 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு வேகம். |
Sr. Librarian | நூலக அறிவியல் / தகவல் அறிவியல் / ஆவணப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் (குறைந்தது 55% மதிப்பெண்கள்/CGPA) மற்றும் 13/18 ஆண்டுகள் துணை/கல்லூரி நூலகர் அனுபவம். புதிய நூலக சேவைக்கான ஆதாரம். |
Senior Technical Officer | எந்தப் பிரிவிலும் M.E. / M.Tech. பட்டம் மற்றும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம். |
Technical Officer | B.E./B.Tech பட்டம் மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம். |
Technical Officer | B.E./B.Tech பட்டம் மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம். |
Assistant Section Officer (ASO) (Hindi Translator) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கட்டாயப் பாடமாக ஹிந்தியில் இளங்கலை பட்டம். |
Technical Assistant Gr. II (Console Operator) | பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதியுடன், கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் 3 வருட டிப்ளமோ (10 வருட அனுபவம்) அல்லது B.E./B.Tech (5 வருட அனுபவம்). |
Senior Secretariat Assistant (Stenographer) | எந்தப் பிரிவிலும் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி. ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் வேகம் மற்றும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் வேகம். |
Technical Assistant Gr.I (Cameraman) | Degree in Cinematography (3 வருட அனுபவம்) அல்லது Diploma in Cinematography / Film Production (5 வருட அனுபவம்). |
NITTTR Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
Sr. Librarian | 25-35 வயது |
Senior Technical Officer | 45 வயதுக்கு மேற்படாதவர் |
Technical Officer | 45 வயதுக்கு மேற்படாதவர் |
Technical Officer | 45 வயதுக்கு மேற்படாதவர் |
Assistant Section Officer (ASO) (Hindi Translator) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Technical Assistant Gr. II (Console Operator) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Senior Secretariat Assistant (Stenographer) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Junior Secretariat Assistant (JSA) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Technical Assistant Gr.I (Cameraman) | 40 வயதுக்கு மேற்படாதவர் |
வயது தளர்வு:
- SC/ ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Sr. Librarian | ரூ.57,700 – ரூ.98,200 |
Senior Technical Officer | ரூ.67,700 – ரூ.2,08,700 |
Technical Officer | ரூ.56,100 – ரூ.1,77,500 |
Technical Officer | ரூ.56,100 – ரூ.1,77,500 |
Assistant Section Officer (ASO) (Hindi Translator) | ரூ.29,200 – ரூ.92,300 |
Technical Assistant Gr. II (Console Operator) | ரூ.29,200 – ரூ.92,300 |
Senior Secretariat Assistant (Stenographer) | ரூ.25,500 – ரூ.81,100 |
Junior Secretariat Assistant (JSA) | ரூ.19,900 – ரூ.63,200 |
Technical Assistant Gr.I (Cameraman) | ரூ.35,400 – ரூ.1,12,400 |
தேர்வு செயல்முறை
NITTTR தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
மற்ற அனைத்தும் விண்ணப்பதாரர்கள் – Rs.500/-
NITTTR Chennai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் NITTTR சென்னை இணையதளத்திற்கு (www.nitttrc.ac.in) சென்று ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தின் ஹார்ட் காபியுடன், தேவையான அனைத்து ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களையும் இணைத்து, “The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai 600 113, Tamil Nadu, India” என்ற முகவரிக்கு 2025 ஜூலை 9 ஆம் தேதி (மாலை 5.30 மணி IST) அன்று அல்லது அதற்கு முன்னர் சென்றடையுமாறு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதற்கான விண்ணப்பக் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 | Click here |
விண்ணப்பதாரர்களுக்கு முக்கியமான அறிவுரை | Click here |
கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |