ITBP Recruitment 2024:மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) தொலைத்தொடர்பு பிரிவில் காலியாகவுள்ள 526 சப்-இன்ஸ்பெக்டர் (தொலைத்தொடர்பு), தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்தோ திபெத்திய எல்லைக் காவல் Indo Tibetan Border Police |
காலியிடங்கள் | 526 |
பணி | சப்-இன்ஸ்பெக்டர் தலைமை காவலர் காவலர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://recruitment.itbpolice.nic.in/ |
ITBP Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | ஆண் | பெண் | மொத்தம் |
சப்-இன்ஸ்பெக்டர் | 78 | 14 | 92 |
தலைமை காவலர் | 325 | 58 | 383 |
காவலர் | 44 | 7 | 51 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ITBP Recruitment 2024 கல்வித் தகுதி
ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி./பி.டெக்/பிசிஏ( B.sc/ B.Tech/ BCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தலைமை காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 12வது தேர்ச்சியுடன் பிசிஎம்/ஐடிஐ/டிப்ளமோ என்ஜினீயரிங் (PCM/ITI/Diploma in Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ITBP Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- தலைமை காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
ITBP Recruitment 2024 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
சப்-இன்ஸ்பெக்டர் | ரூ.35,400 – ரூ.1,12,400 |
தலைமை காவலர் | ரூ.25,500 – ரூ.81,100 |
காவலர் | ரூ.21,700 – ரூ.69,100 |
ITBP Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
ITBP Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/முன்னாள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- UR, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
- கட்டண முறை: ஆன்லைன்
ITBP Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.11.2024 முதல் 14.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- தமிழ்நாடு அரசு சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க! DSWO Mayiladuthurai Recruitment 2025
- LIC ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 – 841 காலியிடங்கள்.. ரூ.88,635 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! LIC Recruitment 2025
- சென்ட்ரல் ரயில்வே துறையில் 2418 அப்ரண்டிஸ் வேலை – தேர்வு கிடையாது! Central Railway Recruitment 2025
- தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது! TIDEL Park Recruitment 2025
- 12வது தேர்ச்சி.. BSF வேலைவாய்ப்பு 2025 – 1121 காலியிடங்கள் || ரூ. 25,500 சம்பளம்! BSF Recruitment 2025