Saturday, April 19, 2025
HomeAny Degree Govt Jobsஇந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025

இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025

India Post Recruitment 2025: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Technical Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய அஞ்சல் துறை
India Post
காலியிடங்கள்01
பணிகள்Technical Supervisor
சம்பளம்ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.04.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.indiapost.gov.in/

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Technical Supervisor – 01 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக அல்லது கல்வி நிறுவனத்தில் A degree/ diploma in mechanical /automobile engineering மற்றும் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அல்லது அரசு பட்டறையில் 2 வருட நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது

மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதியுடன் உள் எரி பொறிகளின் உற்பத்தி, பழுதுபார்ப்பு அல்லது பராமரிப்புக்காக ஏதேனும் ஒரு தொழிற்சாலை அல்லது பட்டறையில் 5 ஆண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை சம்பளம்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து “The Senior Manager, Mail Motor Services, Kolkata, 139, Beleghata Road, Kolkata-700015” என்ற முகவரிக்கு தபால் (Speed Post/ Registered Post) மூலமாக அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.03.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 15.04.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments