IDBI Bank Recruitment 2025: ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். தற்போது IDBI வங்கியில் காலியாகவுள்ள 676 Junior Assistant Manager (Grade ‘O’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IDBI Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி IDBI Bank Ltd |
காலியிடங்கள் | 676 |
பணி | Junior Assistant Manager (Grade ‘O’) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 20.05.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.idbibank.in/ |
IDBI Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Junior Assistant Manager (Grade ‘O’) – 676 காலியிடங்கள்
வகை வாரியான காலியிட விவரங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor Degree) பெற்றிருக்க வேண்டும்.
- பொது / ஓபிசி / பொருளாதாரத்தில் பின்தங்கிய (EWS) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் Bachelor Degree படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- எஸ்.சி / எஸ்.டி / மாற்றுத்திறனாளி (PH) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் Bachelor Degree படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இளநிலை உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்:
வகை | வயது தளர்வு |
OBC Candidates | 03 Years |
SC/ST Candidates | 05 Years |
PWD Candidates | 10 Years |
சம்பள விவரங்கள்
ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு Junior Assistant Manager பணிக்கு முதல் 6 மாதங்களில் உதவித்தொகை – மாதம் ரூ.5,000/- வழங்கப்படும். அடுத்த 2 மாதங்களில் பயிற்சி காலத்திற்கான உதவித்தொகை – மாதம் ரூ.15,000/ வழங்கப்படும். Junior Assistant Manager ஆக வங்கியின் சேவையில் சேர்ந்த பிறகு – CTC ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு Junior Assistant Manager பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை (PRMT) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 250/-
- General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1050/-
- கட்டண முறை: ஆன்லைன்
IDBI Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.05.2025 முதல் 20.05.2025 தேதிக்குள் https://idbibank.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |