HPCL Recruitment 2025: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள 334 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) என்பது பெட்ரோலியப் பொருட்களின் சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பெரிய இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும், இது 1974 இல் நிறுவப்பட்டதிலிருந்து இந்தியாவின் எரிசக்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
HPCL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) Hindustan Petroleum Corporation Limited (HPCL) |
காலியிடங்கள் | 334 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://hindustanpetroleum.com/ |
HPCL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடம் | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Mechanical) | 130 | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Electrical) | 65 | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Instrumentation) | 37 | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Chemical) | 64 |
இதில் மொத்தம் 334 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
HPCL Recruitment 2025 கல்வித் தகுதி
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Mechanical): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (3 வருட படிப்பு) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Electrical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பில் Electrical இன்ஜினியரிங் (3 வருட படிப்பு) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Instrumentation) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பில் Instrumentation, Instrumentation & Control, Instrumentation & Electronics Engineering (3 வருட படிப்பு) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Chemical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பில் Chemical Engineering, Chemical Technology (3 வருட படிப்பு) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | காலியிடம் | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Mechanical) | மாதம் Rs. 30,000 – 1,20,000/- | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Electrical) | மாதம் Rs. 30,000 – 1,20,000/- | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Instrumentation) | மாதம் Rs. 30,000 – 1,20,000/- | ||
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Chemical) | மாதம் Rs. 30,000 – 1,20,000/- |
தேர்வு செயல்முறை
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு,குழு பணி/ குழு விவாதம்,திறன் சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST, PWBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- UR, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு (For Executive) – ரூ.1180/-
- கட்டண முறை: ஆன்லைன்
HPCL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.01.2025 முதல் 14.02.2025 தேதிக்குள் https://hindustanpetroleum.com/ இணையதளத்தில் சென்று “Signup For New Registration” பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |