Erode Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Erode Village Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
காலியிடங்கள் | 141 |
பணிகள் | கிராம உதவியாளர் |
பணியிடம் | ஈரோடு – தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 05.08.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://erode.nic.in/notice/ |
Erode Village Assistant Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு ஈரோடு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈரோடு வருவாய் துறையில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்கு மொத்தம் 141 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தாலுகா வாரியான காலிப்பணியிடங்கள்:
- பவானி – 11
- பெருந்துறை – 39
- கோபிசெட்டிபாளையம் – 19
- மொடக்குறிச்சி – 15
- கொடுமுடி – 10
- ஈரோடு – 09
- தாளவாடி – 01
- சத்தியமங்கலம் – 07
- நம்பியூர் – 16
- அந்தியூர் – 14
Erode Village Assistant Recruitment 2025 கல்வித் தகுதி
இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதிகள்:
- விண்ணப்பதாரர் அந்த வட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
- காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Erode District Village Assistant Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்: 21 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள்: 21 வயது நிரம்பியவராகவும், 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
- இதர வகுப்பினர்: 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.