CWC Recruitment 2025

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் உதவியாளர் வேலை – 22 காலியிடங்கள்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – சம்பளம் ரூ.93,000 வரை! CWC Recruitment 2025

CWC Recruitment 2025: மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (Central Warehousing Corporation (CWC)) காலியாக உள்ள 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Central Warehousing Corporation (CWC)
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம்
காலியிடங்கள்22
பணிகள்Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி15.11.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cwceportal.com/careers/

CWC வேலைவாய்ப்பு 2025: காலிப்பணியிடங்கள் விவரங்கள்

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் (Central Warehousing Corporation – CWC) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

  • Junior Personal Assistant: 16 காலியிடங்கள்
  • Junior Executive (Rajbhasha): 06 காலியிடங்கள்
  • மொத்தம்: 22 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CWC ஆட்சேர்ப்பு 2025-ல் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Junior Personal Assistantஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduate), மற்றும் Office Management and Secretarial Practice ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு படிப்பு/ அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் (Shorthand) ஆங்கிலத்தில் 80 WPM வேகமும், தட்டச்சு (Typing) ஆங்கிலத்தில் 40 WPM வேகமும் கட்டாயம். (இந்தி சுருக்கெழுத்து/தட்டச்சு தெரிந்தவர்களுக்கு கூடுதல் விருப்பம்.)
Junior Executive (Rajbhasha)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தியை ஒரு விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தை ஒரு முக்கியப் பாடமாகவும் கொண்ட பட்டப்படிப்பு (Graduate) அல்லது BA-க்கு சமமான இந்தியில் பட்டம்/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். (இந்தி மென்பொருள் பயன்பாட்டில் திறமை உள்ளவர்களுக்கு கூடுதல் விருப்பம்.)

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் (CWC) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் பின்வரும் தளர்வுகள் உண்டு:

  • SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PWD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PWD (UR) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் Junior Personal Assistant மற்றும் Junior Executive (Rajbhasha) ஆகிய இரு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CWC உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • ஆன்லைன் தேர்வு மற்றும் திறன் தேர்வு (Online Exam & Skill Test): தட்டச்சு (Typing) மற்றும் சுருக்கெழுத்து (Stenography) தேர்வுகள் நடத்தப்படும்.
  • ஆவணச் சரிபார்ப்பு (Document verification): மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பதாரர் பிரிவு
ரூ.500/-SC, ST, PwBD, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Serviceman) மற்றும் பெண்கள் (Women)
ரூ.1,350/-பொது (Unreserved – UR), EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.10.2025 முதல் 1511.2025 தேதிக்குள் www.cwceportal.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top