CMFRI Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு Skilled Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.04.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.. இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CMFRI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Central Marine Fisheries Research Institute (CMFRI) மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | Skilled Staff |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் மூலம் |
நேர்காணல் தேதி | 03.04.2025 |
பணியிடம் | ராமநாதபுரம், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cmfri.org.in/career |
CMFRI Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Skilled Staff – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Skilled Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரங்கள்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் திறமையான பணியாளர் (Skilled Staff) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் திறமையான பணியாளர் (Skilled Staff) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,000/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
CMFRI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மேற்கூறிய பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் கீழ்க்காணும் முகவரியில் 03.04.2025 அன்று காலை 10.00 மணிக்கு நேரடி நேர்காணலுக்கு வரலாம்.
முகவரி: Mandapam Regional Centre of ICAR-CMFRI, Marine Fisheries P.O., Mandapam Camp, Pin 623 520. Ramanathapuram Dist. Tamil Nadu
நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி / தினப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
தொலைபேசி: 04573 241443.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |