Chengalpattu Collector Office Recruitment 2025: தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், கணினி உதவியாளர், தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Chengalpattu Collector Office Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் |
வேலை பெயர் | அலுவலக உதவியாளர், கணினி உதவியாளர், தனிப்பட்ட உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 18.02.2025 |
பணியிடம் | செங்கல்பட்டு,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chengalpattu.nic.in/ |
Chengalpattu Collector Office Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- அலுவலக உதவியாளர் – 01 காலியிடம்
- கணினி உதவியாளர் – 01 காலியிடம்
- தனிப்பட்ட உதவியாளர் – 01 காலியிடம்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chengalpattu Collector Office Recruitment 2025 கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி உதவியாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், கணினியில் MS Office பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கீழ்நிலை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் விவரங்கள்
- அலுவலக உதவியாளர்: இந்த பதவிக்கு மாதம் ரூ.8,000/- சம்பளம் வழங்கப்படும்.
- கணினி உதவியாளர்ர்: இந்த பதவிக்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும்.
- தனிப்பட்ட உதவியாளர்: இந்த பதவிக்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு செங்கல்பட்டு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Chengalpattu Collector Office Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்ப படிவத்தை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், உங்களுடைய கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 18.02.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |