CBSE Recruitment 2025: மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறை 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CBSE வாரியம் தற்போது காலியாக உள்ள 212 Superintendent (மேற்பார்வையாளர்), Junior Assistant (இளநிலை உதவியாளர்) பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 31.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CBSE Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. |
| காலியிடங்கள் | 212 |
| பணிகள் | Superintendent (Group B), Junior Assistant (Group C) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 31.01.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cbse.gov.in/ |
காலியிடங்கள் விவரம்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Superintendent (மேற்பார்வையாளர்) – 142 காலியிடங்கள்
- Junior Assistant (இளநிலை உதவியாளர்) – 70 காலியிடங்கள்
கல்வித் தகுதி
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 12ம் வகுப்பு, Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பதவி வாரியான கல்வித்தகுதி விபரங்கள்:
Superintendent (மேற்பார்வையாளர்):
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமான அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
- கணினி/கணினி பயன்பாடுகள் (விண்டோஸ், எம்.எஸ். ஆபிஸ், பெரிய அளவிலான தரவுத்தளம் கையாளுதல், இணையம்) பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
Junior Assistant (இளநிலை உதவியாளர்):
- அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட 12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
Superintendent (மேற்பார்வையாளர்): பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Junior Assistant (இளநிலை உதவியாளர்): பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
| வகை | வயது தளர்வு |
| SC/ST | 5 years |
| OBC | 3 years |
| PwBD (Gen/EWS) | 10 years |
| PwBD (SC/ST) | 15 years |
| PwBD (OBC) | 13 years |
| Ex-Servicemen | As per Govt. Policy |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
Superintendent (மேற்பார்வையாளர்): பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35400 முதல் ரூ.112400 வரை வழங்கப்பட உள்ளது.
Junior Assistant (இளநிலை உதவியாளர்): பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்பட உள்ளது.
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்
- Women/ST/SC/Ex-s/PWD/Departmental விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- Unreserved/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.800/-
- கட்டண முறை: ஆன்லைன்
CBSE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cbse.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 02.01.2025 முதல் 31.01.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 02.01.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.01.2025
- இந்திய விமானப் படையில் GD வேலை – 340 காலியிடங்கள் || மாதம் ரூ.56,100 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது, 12வது போதும் எயிம்ஸ் நிறுவனத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – 1383 காலியிடங்கள் || மாதம் ரூ.18,000 சம்பளம்! AIIMS CRE 4 Recruitment 2025
- தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – 91 காலையிடங்கள்.. ரூ.44,500 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025
- 10வது, 12வது போதும் அரசு பள்ளியில் வேலை – 14967 காலியிடங்கள்… உதவியாளர் பணி || சம்பளம்: ரூ.18,000! KVS Recruitment 2025












