AVNL Recruitment 2025

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ரூ.21,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! AVNL Recruitment 2025

AVNL Recruitment 2025:  மத்திய அரசு கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited) ஆனது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். சென்னை, ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ள இந்த கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 05 Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்
காலியிடங்கள்05
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி01.03.2025
பணியிடம்சென்னை – ஆவடி
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://avnl.co.in/

AVNL ஆவடி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Staff Car Driver05

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனத்திற்கான தற்போதைய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மோட்டார் இயக்கமுறைகளைப் பற்றிய புரிதல் கொண்டிருக்க வேண்டும் [வாகனங்களின் சிறிய சிக்கல்களைச் சரிசெய்ய அல்லது குறைபாடுகளைச் சரிசெய்ய விண்ணப்பதாரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்].
  • அரசுத் துறைகள் / PSU-களில் கூட்டுச் செயலாளர் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு மோட்டார் கார்களை ஓட்டிய இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ.21,000/- ஊதியம் வழங்கப்படும். ஊதிய விவரங்கள் மற்றும் இதர படிகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

AVNL ஆவடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் Skill Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Agniveer/ST/SC/Ex-s விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.300/-
  • கட்டண முறை: SBI Collect – https://www.onlinesbi.sbi/sbicollect/ 
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

AVNL ஆவடி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 01.03.2025 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Corporate Office Armoured Vehicles Nigam Limited Avadi Chennai 600054

விண்ணப்பத்தை அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை:

  • விண்ணப்ப உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் மற்றும் விளம்பர எண் (AVNLCO/FTC/RECT/2025/012) தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண ரசீது இணைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பங்கள் சாதாரண தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

குறிப்பு:

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக படிக்கவும்.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு AVNL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கானது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top