Thanjavur DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசின் தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் காலியாக உள்ள 03 Lab Technician, Health Visitor, Lab Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
| காலியிடங்கள் | 03 |
| பணி | Lab Technician, Health Visitor, Lab Supervisor |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 23.11.2024 |
| பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thanjavur.nic.in/ |
Thanjavur DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor) – 01 காலியிடங்கள்
- ஆய்வக நுட்புநர் (Laboratory Technician) – 01 காலியிடங்கள்
- காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor) – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Thanjavur DHS Recruitment 2024 கல்வித் தகுதி
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor):
- கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் பட்டம் அல்லது டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: NTEP-ல் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம்
ஆய்வக நுட்புநர் (Laboratory Technician)
- கல்வித் தகுதி: இடைநிலை (10+2) மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: NTEP அல்லது சளி பரிசோதனையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம்
காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)
கல்வித் தகுதி:
- அறிவியலில் பட்டம் அல்லது
- இடைநிலை (10+2) அறிவியல் மற்றும் MPW/LHV/ANM/சுகாதார பணியாளராக பணி அனுபவம் அல்லது சுகாதார கல்வி/ஆலோசனையில் சான்றிதழ் அல்லது உயர் படிப்பு அல்லது
- காசநோய் சுகாதார பார்வையாளர் பயிற்சி சான்றிதழ்
- கூடுதல் தகுதி: கணினி இயக்கத்தில் குறைந்தபட்சம் இரண்டு மாத பயிற்சி சான்றிதழ்.
Thanjavur DHS Recruitment 2024 சம்பள விவரங்கள்
- முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor): ரூ.19800/- மாதம் சம்பளம்
- ஆய்வக நுட்புநர் (Laboratory Technician) : ரூ.13000/- மாதம் சம்பளம்
- காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor): ரூ.13300/- மாதம் சம்பளம்
Thanjavur DHS Recruitment 2024 தேர்வு செயல்முறை
விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
Thanjavur DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பப் படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் (Thanjavur.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ், கணிணி சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிடவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பத்துடன் ரூ. 25/- தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் “துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர்-613001” என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 23/11/2024. கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய விமானப் படையில் GD வேலை – 340 காலியிடங்கள் || மாதம் ரூ.56,100 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது, 12வது போதும் எயிம்ஸ் நிறுவனத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – 1383 காலியிடங்கள் || மாதம் ரூ.18,000 சம்பளம்! AIIMS CRE 4 Recruitment 2025
- தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – 91 காலையிடங்கள்.. ரூ.44,500 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025
- 10வது, 12வது போதும் அரசு பள்ளியில் வேலை – 14967 காலியிடங்கள்… உதவியாளர் பணி || சம்பளம்: ரூ.18,000! KVS Recruitment 2025















